வார்ப்புரு பேச்சு:உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரிவுகளும் மாவட்டங்களும்

இந்திப் பெயர்களை இந்திமொழி எழுத்தாகிய தேவநாகரியில் பார்த்து தமிழில் ஒலிபெயர்த்துள்ளேன். எ.கா. வாரணாசி என்று சொன்னாலும், அது வாராணசி என்றே இந்தியில் உள்ளது. இந்தியில் எகர, ஒகரக் குறில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். ஆங்கில/இலத்தீன எழுத்தைக் கொண்டு மற்ற உயிரொலிகளையும் முடிவு செய்தல் கடினம். சில ஊர்களின் பெயர் ஊ என முடிகின்றது (लखनऊ லக்2நஊ = இலக்கனவு) அது ஔ அன்று. சில ஊர்களின் பெயர் -garh என்று முடிந்தாலும் அது கடு என்றும் தமிழில் எழுதியுள்ளேன், காரணம் प्रतापगढ़ ज़िला என்பது ப்ரதாப்க3ர்*/ப்ரதாப்கட்4* இது ஒரு நுட்பமான ரகர/டகரம்). -கர் என்றும் தமிழில் எழுதலாம். சில முக்கியமான இந்திமொழிப் பெயர்கள்:

बहराइच जिला
कन्नौज जिला
लखनऊ ज़िला
सीतापुर ज़िला
उन्नाव ज़िला
मेरठ ज़िला
बुलन्दशहर ज़िला
सोनभद्र ज़िला
मोरादाबाद ज़िला
बिजनौर ज़िला
ज्योतिबा फुले नगर ज़िला
प्रबुद्धनगर 
सहारनपुर ज़िला
वाराणसी ज़िला
जौनपुर ज़िला
चंदौली ज़िला
ग़ाज़ीपुर ज़िला
हरदोइ ज़िला
लखीमपुर खीरी ज़िला 

--செல்வா (பேச்சு) 21:33, 1 மார்ச் 2012 (UTC)

எனக்கு இந்தி தெரியாது செல்வா :).. இவற்றை மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றி.. நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளான லக்னௌ, மீரட் போன்றவற்றை வழிமாற்றாக கொடுத்துவிடுகிறேன்....--shanmugam (பேச்சு) 03:08, 2 மார்ச் 2012 (UTC)
நன்று சண்முகம். மீரட் என்பதை அவர்கள் मेरठ = மேரட்2 என்கிறார்கள் (ஆனால் நமக்குப் பழக்கமான மீரட்டு என்றேகூடச் சொல்லலாம், ஏனெனில், உள்வாங்கும் ஒவ்வொரு மொழியும் தங்கள் மொழியில் எப்படி வழங்க வேண்டும் என்பது உள்வாங்கும் மொழியின் உரிமை இது உள்வாங்கும் மொழியின் தன்மை இலக்கணம், மரபு சார்ந்து அமையும். இதனால்தான் London என்பதை மிக அருகே இருக்கும் பிரான்சு நாடு, எசுப்பானியா, போர்த்துகல் போன்றவை Londres என்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அதே உரோமன் எழுத்தைத்தான் பயன்படுத்துகின்றார்கள்! நாம் இலண்டன் என்கிறோம்.). --செல்வா (பேச்சு) 03:33, 2 மார்ச் 2012 (UTC)

மற்றும் என்னும் சொல்லின் பயன்பாடு தொகு

பாலும் தேனும் என்று எழுதுவது இயல்பானது. பால் மற்றும் தேன் என்பது செயற்கையான நடை (ஆங்கிலத்தைப் பின்பற்றி எழுதுவதால் இருக்கலாம்). சில இடங்களில் "மற்றும்" என்னும் சொல்லின் பயன்பாடு ஏற்றதாக இருக்கலாம். இதே போல மூன்று அல்லது நான்கு சொற்கள் வந்தாலும், ஆங்கிலத்தைப் பயன்படுத்தி கடைசி சொல்லுக்கு முன்னே "மற்றும்" இட்டு எழுதுகின்றார்கள் (எ.கா. ஊடகங்களிலே). எத்தனை சொற்கள் வந்தாலும் -உம் என்னும் பின்னொட்டு இட்டு எழுதுவது நல்லது இயல்பானது. பாலும் பழமும் ஒரு கிலோ அரிசியும் வாங்கி வந்தேன் என்பது இயல்பான நடை. பால், பழம் மற்றும் ஒரு கிலோ அரிசி வாங்கி வந்தேன் என்பது செயற்கையான, ஆங்கில விதிகளைப் பின் பற்றி எழுதும் நடை. --செல்வா (பேச்சு) 06:29, 2 மார்ச் 2012 (UTC)

Return to "உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரிவுகளும் மாவட்டங்களும்" page.