வார்ப்புரு பேச்சு:கும்பகோணம் கோயில்கள்

கும்பகோணத்தில் சைவ மற்றும் வைணவ கோயில்கள் என்று இணைத்து எழுதப்படவேண்டிய கட்டுரைகளை தனித்தனியாக எழுத வேண்டுமா? பல கட்டுரைகளில் போதிய உள்ளடக்கம் இல்லை. மேற்கொண்டும் உள்ளடக்கம் சேர்க்க போதுமான தகவல் இருக்குமா என்பதும் சந்தேகம். பரவலாக அறியப்பட்ட கோயில்கள் தவிர்த்து மற்றவற்றை இணைத்து எழுத வேண்டுகிறேன். இதுமாதிரியான உரையாடல்கள் தவியில் முன்பும் நடைபெற்றுள்ளன. -- Mdmahir (பேச்சு) 15:39, 6 செப்டம்பர் 2015 (UTC)

பரவலாக அறியப்படுபன தவிர மற்றவற்றை இனி ஒன்றாக எழுதுதல்

தொகு

ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே பெயரைக் கொண்ட கோயில்கள் வரும்போது அவ்வாறு ஒரே தலைப்பில் கொடுத்துவிடுகிறேன். இனி எழுதும் கட்டுரைகளை பிறவற்றோடு சேர்க்க முயற்சிக்கின்றேன். தனித்தனிக் கோயிலாக இருந்தாலும் உரிய மேற்கோளையும், நாளிதழ் செய்தி இணைப்புகளையும் ஆங்காங்கு தந்துள்ளேன். பல்வேறு கால கட்டங்களில் விழாக்கள் என்ற நிலையில் கூடுதல் செய்தி சேர வாய்ப்புண்டு என்பதால் இவ்வாறு எழுதி வந்தேன். ஆரம்ப காலத்தில் ஒரு விக்கிபீடியர் கும்பகோணம் கோயில்கள் என வார்ப்பு உருவாக்க யோசனை தந்ததன் அடிப்படையில் இவ்வாறு வார்ப்பு உருவாக்கி, கும்பகோணத்தில் உள்ள கோயில்கள் முடிந்தவரை விடுபாடின்றி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதி வருகின்றேன். அதற்கு அடிப்படையாக தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் இருந்த கும்பகோணம் கோயில்கள் பற்றிய விவரங்களை அடிப்படையாக் கொண்டு களப்பணி மேற்கொண்டு ஒவ்வொரு கோயிலாகச் சென்று விவரங்களைத் தொகுத்து சேர்க்க ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும்போது உரிய புகைப்படங்களை எடுத்துச் சேர்த்தேன். தற்போது, தங்களது கருத்து ஒரு தெளிவை உண்டாக்கியுள்ளது. பரவலாக அறியப்பட்ட கோயில்களைத் தவிர்த்து மற்றவற்றை இணைத்து எழுத இக்கருத்து உதவியாக இருக்கும் என முழுமையாக நம்புகிறேன். இனி அவ்வாறு செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:39, 7 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம், Mdmahir7 செப்டம்பர் 2015 அன்று கூறியபடி பரவலாக அறியப்படுபன தவிர மற்றவற்றை இனி ஒன்றாக எழுதுவேன். தங்களின் கருத்திற்கு நன்றி.
Return to "கும்பகோணம் கோயில்கள்" page.