வார்ப்புரு பேச்சு:தொடர்-தொகுப்பு 2024/நிகழ்வு
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic வழிகாட்டுபவர் எனும் கருத்துரு (mentoring concept)
வழிகாட்டுபவர் எனும் கருத்துரு (mentoring concept)
தொகுநிகழ்வில் கலந்துகொள்ளும் அண்மைய காலத்துப் பயனர்கள், மேம்பாட்டுப் பணிகளில் கூடுதல் பயிற்சி தேவைப்படும் பயனர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் வழிகாட்டுபவர்கள் (mentors) செயல்பட்டால் சிறப்பு. தொடர்பங்களிப்பாளர்கள் தன்னார்வ அடிப்படையில் தம்மை நியமனம் செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கலாம். வழிகாட்டுபவர்:கற்றுக்கொள்பவர், 1:1 எனும் விகிதாச்சாரத்தைக் கருத்திற்கொண்டு இந்தக் கருத்துருவை முன்னெடுக்க பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 9 ஆகத்து 2024 (UTC)