வார்ப்புரு பேச்சு:பயனர் வணக்கம் தவிர்ப்பவர்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

இந்த வார்ப்புருவின் பயனும் பொருளும் என்ன? வணக்கம் என்பது தமிழ்ச் சொல் இல்லையா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:06, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம் தூய தமிழ்ச்சொல். மனிதர்களிற்கு வணக்கம் கூறுவதை ஏற்காதோர், கடவுளிற்கு மட்டும் வணக்கம் (வணங்குவோர்) தெரிவிப்போர் இந்த வார்ப்புருவை பாவிக்கின்றனர்.--சங்கீர்த்தன் (பேச்சு) 07:43, 21 அக்டோபர் 2012 (UTC)Reply
எங்கோ ஒரிடத்தில் வணக்கம் வேற்றுமொழிச் சொல்லான நாமக்கரணம் என்பதிலிருந்து வந்ததாக யாரோ கூறக் கேட்டிருக்கிறேன். ஆகையாலே கேட்டேன். மெலும், இவ்வார்ப்புரு, பயனர்களை அவமதிப்பது போல் இருந்தது நன்றி! -`தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:06, 21 அக்டோபர் 2012 (UTC)Reply
குழப்பத்தைத் தவிர்க்க, இப்பயனர் (இறைவனைத் தவிர) யாருக்கும் தலைவணங்காதவர் என்பது போல் எழுதலாம்--இரவி (பேச்சு) 12:54, 21 அக்டோபர் 2012 (UTC)Reply
இரவி, இரண்டும் வெவ்வேறு. வணக்கம் சொல்வது வேறு, தலை வணங்காதவர் வேறு அர்த்தத்தைத் தரும். இங்கு வணக்கம் தவிர்ப்பவர் என்பதே சிறந்ததாகப் படுகிறது.--Kanags \உரையாடுக 20:24, 21 அக்டோபர் 2012 (UTC)Reply
வணக்கம் தமிழ்ச்சொல்லே ஆனாலும் அது நமசுக்காரம் என்ற வடமொழிச் சொல்லின் நேரடித் தமிழாக்கம் என்பதால் (என் நினைவில்) மா. நன்னன் போன்றோர் அதைத் தவிர்த்து வந்தனர். இயல்பாக தமிழர் வழக்கப்படி, வாங்க வாங்க, நல்லா இருக்கீங்களா? என்று வழக்கிலும், வருக, நலமா? என்ற சீர்வழக்கிலும் விளிப்பது மரபு. காலை வணக்கம் போன்ற ஆங்கிலத்தாக்க மினவல்களையும் தவிர்ப்பது நல்லது. -- சுந்தர் \பேச்சு 04:07, 24 அக்டோபர் 2012 (UTC)Reply
இந்த வார்ப்புரு தவறான புரிதல்களையே ஏற்படுத்துகிறது. தமிழ்குரிசில் அவர்கள் முதல்வரியில் கூறியுள்ளது போல வணக்கம் என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றே நானும் நினைத்தேன். இங்கு தொடங்கப்பட்டிருக்கும் உரையாடல் வார்ப்புருவின் திருத்தங்களை நோக்கி சென்று பின் நிறைவடையாமல் உள்ளது. சங்கீர்த்தன் கூறியுள்ளது போல கடவுளிற்கு மட்டும் வணக்கம் (வணங்குவோர்) தெரிவிப்போர் என்ற கருத்தினை பிரதிபளிக்கும் வகையில் வார்ப்புருவின் வரிகளை திருத்த வேண்டுகிறேன். நன்றி! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:03, 13 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "பயனர் வணக்கம் தவிர்ப்பவர்" page.