வார்ப்புரு பேச்சு:புதுச்சேரி மாவட்டம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath
@செல்வா, Kanags, and AntanO:, Administrative blocks என்பதை தமிழில் எப்படி எழுதுவது??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:14, 13 மே 2020 (UTC)
- நிருவாக / நிருவாகம் சார்ந்த தடைகள்? --AntanO (பேச்சு) 11:20, 13 மே 2020 (UTC)
- Block இங்கு தடை என்ற பொருளில் வரவில்லை.--Kanags \உரையாடுக 11:24, 13 மே 2020 (UTC)
- இல்லை அண்ணா, பாண்டியில் ஊராட்சி ஒன்றியமே கிடையாது. இது மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ள நிலையை குறிக்கிறது.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:34, 13 மே 2020 (UTC)
- மாவட்டத்துக்கு அடுத்து கீழுள்ள பகுப்பு வட்டம். ஆங்கிலத்திலே Administrative block என்று அவர்கள் கூறினால் கூறிக்கொள்ளட்டுமே. தமிழில் அதனை வட்டம் (ஆட்சிப்பிரிவு) என்றிருந்தால் போதும். --செல்வா (பேச்சு) 11:49, 13 மே 2020 (UTC)
- @செல்வா: பாண்டிச்சேரியில், தமிழ்நாட்டில் உள்ளது போல ஊராட்சி ஒன்றியம் என்பதே கிடையாது, ஆனால் இவர்கள் ஒன்றியத்திற்கு ஏற்றார் போல Administrative block என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இதை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ஆனால் இது வட்டத்தை குறிக்காது, பாண்டிச்சேரியில் வட்டம் உள்ளது. உ+தா. புதுச்சேரி வட்டம்--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:03, 13 மே 2020 (UTC)
இதை ஆங்கிலத்திற்கு ஏற்றார் போல நிர்வாக ஒன்றியம் என்று எழுதியுள்ளேன்.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:05, 13 மே 2020 (UTC)
- நிருவாக ஒன்றியம் என்றிருக்கவேண்டும். ஆனால் அதன் பொருள் பொருந்துமா என்று பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் administrative block என்பதை நாம் ஏன் அப்படியே "நிருவாக" என்றெல்லாம் சொல்லவேண்டும் என்று புரியவில்லை. புதுச்சேரி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். 3-4 பகுப்புகள் உட்பகுப்புகளுக்கு நாம் தமிழில் இயல்பாக பெயர் சூட்டி வழங்கலாகாதா? எல்லா ஒன்றியங்ககும் நிருவாக ஒன்றியங்கள்தாம். எல்லா வட்டம், மாவட்டமும் நிருவாகத்துக்கு உட்பட்டதுதான். புதுச்சேரி வட்டம் என்பதில் வட்டம் என்பது ஒரு நிருவாக உட்பிரிவின் பெயரா? அதன் வரையறை என்ன?--செல்வா (பேச்சு) 18:30, 13 மே 2020 (UTC)
- @செல்வா: புதுச்சேரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் காண்க.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:38, 14 மே 2020 (UTC)