வார்ப்புரு பேச்சு:Infobox station
@AntanO: வார்ப்புருக்களை நாம் தமிழிலே உருவாக்கலாமே, ஏதேனு நிர்வாகச் சிக்கல்கள் உள்ளதா, இன்றைய நிலையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் தமிழ் படுத்துவது எளிது, தமிழ்விக்கியில் வருங்காலத்தில் ஆயிரக்கணக்கில் வார்ப்புருக்களை பயன்படுத்தினால் மாற்றுவது கடினம் அல்லவா... ஆலோசனை கூறுங்கள்....--குறிஞ்சி (பேச்சு) 15:33, 19 ஆகத்து 2015 (UTC)
- குறிஞ்சி, வார்ப்புருக்களை தமிழ்ப்படுத்துவதால் பலன் இருக்காது. :::1. ஆங்கில விக்கியில் இவ்வார்ப்புரு மேம்படுத்தப்பட்டிருந்தால், அதை இங்கே மேம்படுத்துவது சிக்கலாகிவிடும்.
- 2. வார்ப்புருக்களை தமிழ்ப்படுத்தினால் முழுமையையும் தமிழாக்க வேண்டியிருக்கும். தலைப்புகளை தமிழ்ப்படுத்துவதால் மட்டும் பலனில்லை. ஆங்கில விக்கியில் இருந்து வார்ப்புருக்களை நகல் எடுக்கும்போது, தமிழ் விக்கியில் மொத்த வார்ப்புருவையும் மாற்ற வேண்டியிருக்கும். அதாவது ஆங்கில வார்ப்புருவை தமிழ் சொற்களால் நிரப்ப வேண்டியிருக்கும். அல்லது தமிழ் வார்ப்புருவை எடுத்து, ஒவ்வொரு தகவலாக எழுத வேண்டியிருக்கும். அது சிக்கலான ஒன்று. நேர விரயமும் கூட!
- 3. வார்ப்புரு ஆங்கிலத்தில் இருந்தாலும் காட்டப்படும் சொற்கள் தமிழில் தான் இருக்கும். அத்தகைய மாற்றங்களை மட்டும் செய்வது பலன் தரும். வார்ப்புருக்களை நிரல்களில் எழுதுவதால் தமிழை உள்ளே புகுத்துவது சிக்கல் தரும்.
- குறிஞ்சி, வார்ப்புருக்களை தமிழ்ப்படுத்துவதால் பலன் இருக்காது. :::1. ஆங்கில விக்கியில் இவ்வார்ப்புரு மேம்படுத்தப்பட்டிருந்தால், அதை இங்கே மேம்படுத்துவது சிக்கலாகிவிடும்.
எனவே, அம்முயற்சியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு வேளை, பிற்காலத்தில் செய்ய வேண்டிய நிலை வந்தாலும், தானியக்கமாக செய்துவிட முடியும். நம்மில் சிலர் தானியக்கமாக தொகுத்துப் பழகியிருக்கிறோம். எனவே, தேவைப்படுமேயெனில் எப்போது வேண்டுமானாலும் தானியக்கமாக செய்துவிடமுடியும். ஒரே நாளில் ஆயிரம் கட்டுரைகள் கூட செய்யலாம்! அவ்வாறு செய்ய வேண்டுமெனில், மற்றோரை ஆலோசித்து செய்யுங்கள். புதிய கட்டுரைகளில் தமிழில் சேர்த்து பழகலாம். பழையவற்றை கிளறுவதால் பலன் இருக்காது. ஏனெனில், வார்ப்புரு தமிழில் இருந்தாலும், ஆங்கிலத்தில் இருந்தாலும், காட்டப்படும் சொற்கள் தமிழில் தான் இருக்கப் போகின்றன. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:34, 19 ஆகத்து 2015 (UTC)
- ஆம், தமிழ்க்குரிசில் கூறுவது சரியே. தொழில்நுட்ப தொடர்பு கொண்ட வார்ப்புருக்களும் பல உள்ளன. அவற்றின் இணைப்புக்களை தேடி மாற்றுவதில் செலவிடும் நேரத்தில் வேறுபல வேலைகள் செய்யலாம். வார்ப்புருக்களை தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பாருங்கள். மொழிக்கும் அதற்கும் தொடர்பு வேண்டாம். ஆனால் விளைவு (output) தமிழில் இருக்கட்டும். --AntanO 16:41, 19 ஆகத்து 2015 (UTC)
@AntanO: @தமிழ்க்குரிசில்: ஆலோசனைக்கு நன்றி--குறிஞ்சி (பேச்சு) 16:46, 19 ஆகத்து 2015 (UTC)