வாலி (இராமாயணம்)

வானரமான வாலி கிஷ்கிந்தையின் அரசன்

வாலி இராமாயண கதாபத்திரம். வானரமான வாலி கிஷ்கிந்தையின் அரசன். இவன் சுக்கிரீவனுக்கு மூத்த சகோதரனும் சிறந்த வீரனும் ஆவான். எதிரில் நிற்கும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன் வாலி. சுக்கிரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டவதற்கு ஏதுவாக, வாலி இராமனால் கொல்லப்படுகிறான்.[1] [2] மேலும் வாலி தனக்கு வேண்டிய வரங்களைப் பெற தேவலோக அரசன் இந்திரன் குறித்து தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தாரை இவனது மனைவி. அங்கதன் இவர்களது மகன்.

வாலியும், சுக்கிரீவனும் போரிடும் போது, இராமன் மறைந்து நின்று எய்திய அம்பால் வாலி இறத்தல்

மேற்கோள்கள் தொகு

  1. வாலி வதைப் படலம்
  2. SECTION

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vali
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலி_(இராமாயணம்)&oldid=3832501" இலிருந்து மீள்விக்கப்பட்டது