வாலையாறு அணை

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அணை

வலையாறு அணை (Walayar Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு அணை ஆகும். இந்த அணை கல்பாத்திப்புழா ஆற்றின் துணை ஆறான வாலையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 1964 இல் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இது இப்பகுதியில் நீர்ப்பாசனத்திற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. அணை ஒரு பெரிய நீர்த்தேக்கப் பகுதியைக் கொண்டதாக உள்ளது. இந்த நீர்த்தேக்கப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் வலயாறு அணையில் இருந்து வரும் நீரை நீர்ப்பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ளார்கள். ஆனால் தற்போது வலையாறில் மழை குறைவாக இருப்பதால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. நீர்த்தேக்கப் பகுதி மிகவும் அழகானதாக உள்ளதால், சுற்றுலாவுக்கு சிறந்த வாய்ப்புள பகுதியாக உள்ளது.

வாலையாறு அணை
Walayar Dam front view.JPG
அதிகாரபூர்வ பெயர்waluwanad
அமைவிடம்இந்தியா, கேரளம், பாலக்காடு
புவியியல் ஆள்கூற்று10°50′40″N 76°51′7″E / 10.84444°N 76.85194°E / 10.84444; 76.85194ஆள்கூறுகள்: 10°50′40″N 76°51′7″E / 10.84444°N 76.85194°E / 10.84444; 76.85194
கட்டத் தொடங்கியது1953
திறந்தது1964
இயக்குனர்(கள்)கேரள அரசு
அணையும் வழிகாலும்
Impoundsவாலையாறு
உயரம்20.42 m
நீளம்1478.00 m
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity18.4 மில்லியன் கியூபிக் மீட்டர்
வடி நிலம்106.35 சதுர கி.மீ

படகாட்சியகம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலையாறு_அணை&oldid=3038509" இருந்து மீள்விக்கப்பட்டது