வால் சிவப்பு (நெல்)
வால் சிவப்பு (Val Sivappu) பாரம்பரிய நெல் வகையாக உள்ள இது, தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சுமார் 160 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும். வால் சிவப்பு நெல்மணி சிவப்பு நிறமுடனும், சிறந்த சுவையுடனும் விளங்குகிறது. மேலும், இந்த நெல் மணியின் பின்புறத்தில் காணப்படும் ஒரு முள், மயிர் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் சிறிய பறவையின் வால் போன்று காட்சி அளிக்கிறது.[1]
வால் சிவப்பு |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
145 - 150 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 900 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா[1] |
பருவகாலம்
தொகுமத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான வால் சிவப்பு, செப்டம்பர் 15 இல் தொடங்கும் பின் சம்பா பட்டம் (பருவம்) ஏற்றதாகும்.[1] மேலும், தமிழகத்தின் திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இப்பட்டத்தில் (பருவத்தில்) வேளாண்மை நடப்பது குறிப்பிடத்தக்கது.[2]
- வால் சிவப்பு நெல், ஒரு ஏக்கருக்கு சுமார் 900 கிலோ வரையில் (75 கிலோ பையில், 12 பைகள்) விளைச்சல் தரக்கூடியது.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Val Sivappu". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]