வாள் மங்கலம்
வாள்மங்கலம் (வாண்மங்கலம்) [1] என்னும் துறையைச் சேர்ந்த பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. புறநானூறு 96 இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது.
இலக்கணம்
தொகுபோருக்கு எழும் அரசனின் வாளை வாழ்த்துவது வாள் மங்கலம் என்று தொல்காப்பியமும்,[2] புறப்பொருள் வெண்பாமாலையும் [3] குறிப்பிடுகின்றன.
இலக்கியம்
தொகுஔவையார், தொண்டைமானிடம் அதியமானுக்காகத் தூது சென்றார். அச்சூழலில் அவருக்குத் தொண்டைமான், நெய் பூசிப் பளபளவென அடுக்கப்பட்டிருந்த தன் படைக்கொட்டிலைக் காட்டினான். அதியமானின் படைக்கலன்கள் ‘போரிட்டுப் போரிட்டு கொல்லன் உலையில் கூர் வடிக்கப்பட்டு வருகின்றன’ என்று அதியமானின் போர்த்திறத்தை ஔவையார் எடுத்துரைத்தார்.[4] இது வாள் மங்கலம் என்னும் துறை.
அடிக்குறிப்பு
தொகு- ↑ வாள் மங்கலம் என்னும் சொற்கள் புணரும்போது வாண்மங்கலம் எனப் புணரும்.
- ↑ மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும் (தொல்காப்பியம், புறத்திணையியல், 30, பாடாண் திணை)
- ↑
கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 223. பாடாண் படலம்) - ↑
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே. (புறநானூறு 96)