வாழப்பள்ளி
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில், சங்கனாச்சேரி வட்டத்தில் வாழப்பள்ளி என்னும் ஊர் அமைந்துள்ளது.
— நகரம் — | |
ஆள்கூறு | 9°16′N 76°19′E / 9.27°N 76.31°E |
மாவட்டம் | கோட்டயம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வரலாறு
தொகுபழைய காலத்து வாழப்பள்ளியின் நடுப்பகுதியில் வாழப்பள்ளி கோவில் அமைந்திருந்தது. அன்றைய காலத்தில் சங்கனாச்சேரி, வாழப்பள்ளியின் பகுதியாக இருந்தது. அப்போது பெரிய ஊராக விளங்கியது.
பெயர்க் காரணம்
தொகு"வாழ்க்கை பள்ளி" என்ற பெயரே வாழப்பள்ளி எனத் திரிந்ததாகக் கருதுகின்றனர். பழைய புத்த சமயக் கோயில் இங்கிருந்ததாகக் கருதுகின்றனர். பள்ளி என்னும் பாளி மொழிச் சொல், மலையாளத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளி என்பது புத்த-ஜைன மத கோயில்களை குறிக்கப் பயன்பட்டது. பிற்காலத்தில், புத்த கோயில்கள் இடிக்கப்பட்டன.[1].
போக்குவரத்து
தொகுசங்கனாச்சேரியில் இருந்து நிலவழியிலும், நீர்வழியிலும் போக்குவரத்து வசதி உள்ளது. திருவனந்தபுரம் - அங்கமாலி எம்.சி.ரோடு, சங்கனாச்சேரி - குமுளி (சி.வி. ரோடு) ஆகியன இந்த ஊரைக் கடந்து செல்கின்றன.
சான்றுகள்
தொகு- ↑ கேரளத்திலெ புத்த சரித்ரம்: பேரா. சித்தார்த சந்திரா