வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி
வாழ்வியல் திறன்களை உலக சுகாதார அமைப்பு (WHO) "அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் சவால்களையும் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பு மற்றும் நேர்மறையான நடத்தைக்கான திறன்கள்" என வரையறை செய்கிறது. இவை மதிப்புள்ள நடத்தையைத் தீர்மானிப்பதோடு, தன்-விழிப்புணர்வு மற்றும் ஒருவொருக்கொருவர் உறவு கொள்ளல் போன்ற தனிப்பட்ட திறன்களையும் பிரச்சனையை தீர்த்தல் மற்றும் கூர்ந்தாய்வு சிந்தனை போன்ற பிரதிபலிப்பு திறன்களையும் உள்ளடக்கிய உளவியல் சார்ந்த சமூக திறன்களை முன்னிலைப்படுத்துகின்றன. வாழ்க்கைத் திறன்களை நடைமுறைப்படுத்துவது, நடவடிக்கை எடுப்பதற்கும், மாற்றத்தை உருவாக்குவதற்கும், என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அடையவும் வழிவகுக்கிறது. மேலும், தன்-மதிப்பு, சமுதாயத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கிறது. நலத்திறன்கள் மற்றும் அதே போன்ற வாழ்வாதரத் திறன்களான கைவினை, பண மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் திறன்கள் போன்ற உடல் அல்லது புலனுணர்வு சார்ந்த இயக்கத் திறன்களில் இருந்து வாழ்வியல் திறன்கள் வேறுபடுகின்றன. இருப்பினும், உடல்நலம் மற்றும் வாழ்வாதார கல்வியையும் வாழ்வியல் திறன் கல்வியையும் ஒன்றுக்கொன்று மாற்றாக செயல்படும் வகையில் வடிவமைக்க முடியும்.
வாழ்வியல் திறன்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி (LSBE) பல பகுதிகளிலும் குழந்தை மேம்பாட்டிற்கும் சுகாதார மேம்பாட்டிற்கும் ஆதரவாக நீண்ட வரலாறு கொண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டில், சுகாதார மேம்பாட்டிற்கான ஒட்டாவா சார்டர் என்ற அமைப்பு சிறந்த ஆரோக்கியத் தேர்வுகள் செய்வதில் வாழ்வியல் திறன்களை அங்கீகரித்தது. குழந்தைகளின் முழு உரிமையின் வளர்ச்சிக்காக கல்வி இயக்கப்பட வேண்டும் என்று கூறி, குழந்தைகளின் உரிமைகள் மீதான 1989 ஒப்பந்தம் (CRC) வாழ்வியல் திறன்களை கல்வியுடன் இணைத்தது. அனைவருக்கும் கல்வி குறித்த 1990 ஆம் ஆண்டு ஜாம்டியன் பிரகடனம் இந்த தொலைநோக்கு பார்வையில் உயிர்வாழவும், திறன் மேம்பாடு மற்றும் தரமான வாழ்க்கை போன்றவற்றை வாழ்வியல் திறன்களின் அத்தியாவசிய கற்றல் கருவிகளில் உள்ளடக்கியது. 2000 டக்கர் உலக கல்வி மாநாட்டில் அனைத்து இளைஞர்களும் பெரியவர்களும் "அறிவை கற்றல், செய்தல், இணைந்து வாழ்தல், இருத்தல்'' போன்ற மனித உரிமைகளைப் பெற ஏதுவாக கற்ற கல்வி பயனளிக்க வேண்டும் என்பதற்காக ஆறு EFA இலக்குகளுள் இரண்டுடன் வாழ்வியல் திறன்களை இணைத்துள்ளது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் மீதான ஐ.நா. காஸ் (2001), குழந்தைகள் மீதான ஐ.நா. காஸ் (2002), உலக இளைஞர் அறிக்கை (2003) ஆகியவற்றில் வாழ்வியல் திறன்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை குழந்தை மற்றும் இளைஞர் வளர்ச்சி மற்றும் கருத்தியல் துலங்கல்களை எதிர்கொள்ளும் ஒரு வாழ்க்கை முறையாக இப்போது அங்கீகரித்துள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் கல்வி (2004), கல்விக்கான நிலையான வளர்ச்சியில் ஐ.நா. சகாப்தம் (2005), குழந்தைகள் மீதான வன்முறை குறித்த ஐ.நா. செயலாளர் ஆய்வு (2006), பெண்களின் நிலை பற்றிய 51 ஆவது கமிஷன், மற்றும் உலக வளர்ச்சி அறிக்கை (2007) போன்றவையும் இதை அங்கீகரித்துள்ளன.
எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகள், அறிவு, மதிப்புகள், மனப்பான்மை மற்றும் திறன்கள் போன்றவை கூர்ந்தாய்வு சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன், சுய மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் ஒருவொருக்கொருவர் தொடர்பு கொள்ளல் போன்ற குறிப்பிட்ட திறன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.