வாழ்க்கைத் திறன்கள்

வாழ்க்கைத் திறன்கள் (Life skills) என்பது அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும், சவால்களையும் மனிதர்கள் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பையும் நேர்மறையான நடத்தைகளையும் உதவும் பண்புகளாகும்.[1] இன்னும் வாழ்க்கைத்திறன் என்பதை உளவியல் திறன் என்றும் கூறலாம்[2]. தினசரி மனித வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் கேள்விகளைக் கையாளப் பயன்படும் கல்வி அல்லது நேரடியான அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட மனிதத் திறன்களின் தொகுப்பாக இத்திறன்கள் கருதப்படுகின்றன. சமுதாய நெறிகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடத்தைகள் மற்றும் திறன்கள் ஒருவருக்கொருவர் மாறுபடும். சமுகத்தின் நல்வாழ்வுக்காகவும் தனிநபர்களின் தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்ற தனித்திறமைகள் யாவும் வாழ்க்கைத்திறன்கள் என்றே கருதப்படுகின்றன.

வகைப்படுத்தல்

தொகு

யுனிசெஃப் மதிப்பீட்டு அலுவலகம் இத்தகைய உளநல திறன்களின் "உறுதியான பட்டியல் ஏதுமில்லை எனக் கூறுகிறது.[3]

ஆயினும்கூட, யுனிசெஃப் உளவியல் மற்றும் சமூக திறன்களை பட்டியலிட்டுள்ளது. உதாரணமாக, முடிவெடுப்பது பெரும்பாலும் விமர்சன சிந்தனை ("என் விருப்பத்தேர்வுகள் என்ன?") மற்றும் மதிப்புகள் ("எனக்கு என்ன முக்கியம்?"), (நான் இதை எப்படி உணர்கிறேன்?) சார்ந்தவைகளே. இத்திறன்கள் சக்திவாய்ந்த நடத்தை விளைவுகளை உருவாக்குகிறது, குறிப்பாக இந்த அணுகுமுறை மற்ற உத்திகளால் ஆதரிக்கப்படுகிறது.[4]

இருப்பினும், உளவியல் திறன்கள் மற்றும் தனிமனித திறமைகள் ஆகியவை பொதுவாக கல்வியறிவு மற்றும் எண்னறிவு திறன்களுடன் இணைந்து செயல்படுகின்றன என்று யுனிசெப் மதிப்பிடுகிறது.[5] கலாச்சாரத்திற்கு கலச்சாரம் மற்றும் வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் பண்பை இது பெற்றுள்ளதே இதற்கான காரணமாகும். கல்வி, சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான கற்றல் செயல்பாடுகளுக்கு இத்திறன்கள் உதவுகின்றன என்பதை யுனிசெப் ஏற்றுக் கொள்கிறது.[6]. வாழ்க்கைத் திறன் என்பது பல்வேறு தயாரிப்பு முறைகளின் ஒரு தொகுப்பாகும். நகைச்சுவை, நிதித் திறன்[7] போன்ற பல திறன்களை ஒரே சமயத்தில் உருவாகி திறமைகளாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றன. நகைச்சுவை உணர்வு சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும், அச்சூழ்நிலையை நல்லியல்பு நிலையை நோக்கி மாற்றிக்கொள்ளவும் ஒருவருக்கு உதவுகிறது. பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவற்றை புறந்தள்ளவும், மனிதன் ஒரு தரமான வாழ்க்கையை அடையவும் நகைச்சுவை உணர்வு அனுமதிக்கிறது[8]


முக்கிய வாழ்க்கை திறன்கள்

தொகு

உலக சுகாதார அமைப்பின் டெல்பி முறை [9][10][11][12] மூலம் அடையாளம் காணப்பட்ட முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் சில கீழே:

  1. முடிவு செய்தல்
  2. சிக்கல் தீர்வு
  3. படைப்பாற்றல்
  4. மாற்று சிந்தனை
  5. தொடர்பாடல்
  6. உறவு
  7. சுய விழிப்புணர்வு
  8. தன்னம்பிக்கை
  9. புரிதல்
  10. எதையும் தாங்கும் இதயம்
  11. ஒன்றுபடுதல்

K-12 க்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைத் திறன்களுக்கான பாடத்திட்டம் வெற்றிகரமான சுதந்திரமான வாழ்க்கைக்குத் தேவையான தகவல்தொடர்பு மற்றும் நடைமுறை திறன்களை வலியுறுத்துகிறது, அதேபோல் தனி பயனாக்கப்பட்ட-கல்வித் திட்டம் (IEP) மூலம் உடல் வளர்ச்சி குறைபாடுகள் / சிறப்பு கல்வி பெறும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.(IEP).[13]

பெற்றோரின் பங்களிப்பு

தொகு

வாழ்க்கை திறன்கள் பெரும்பாலும் பெற்றோர்களால் மற்றும் ஆசிரியர்களால், மறைமுகமாக குழந்தைகளை கவனித்தல் மற்றும் அனுபவத்தின் மூலமோ அல்லது நேரடியாக ஒரு குறிப்பிட்ட திறனைக் கற்பிப்பதன் மூலமோ கற்றுக்கொடுக்கப்படுகிறது, பெற்றோர் பராமரிப்பு என்பது வாழ்க்கைத் திறன்களின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பாக கருதப்படுகிறது, இது ஒரு நபருக்கு இயற்கையாகவோ அல்லது கற்பிப்பதன் மூலமோ வரலாம். கருவுற்ற காலத்திலும் குழந்தை பிறந்த பின்னும் பெற்றோர் பராமரிப்பில் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்களை ஒரு நபருக்கு கற்பிப்பதன் மூலம் குழந்தை வளர்ச்சியில் ஒருங்கிணைந்த கூடுதல் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துகிறது, மேலும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பெரியவர்களாகும் வரை வழிநடத்துவதன் வழியே நடத்தையின் வழியேயும் கற்பிக்கலாம்.

பெற்றோரிடையே காணப்படும் குறைபாடுகள், விவாகரத்து, உளவியல் கோளாறுகள் அல்லது குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் (அதாவது போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற ஆபத்தான நடத்தை போன்றவை) காரணமாக பாரம்பரிய குடும்ப கட்டமைப்புகள் மற்றும் ஆரோக்கியமான உறவுகள் முறிந்து போகும்போது பல வாழ்க்கைத் திறன்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உதாரணமாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, முன்னாள் குழந்தைப் தொழிலாளர்களுக்கும், இந்தோனேசியாவில் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் குழந்தைத் துஷ்பிரயோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு உதவுவதற்காகவும், வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கின்றது. [14]


மேற்கோள்கள்

தொகு
  1. Life Skills Education for Children and Adolescents in Schools (Report). World Health Organization. hdl:10665/63552. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
  2. Best Thomas, A study on stress and its correlatives with family environment. Retrieved from ResearchGate.
  3. "Global evaluation of life skills education programmes". unicef.org (Evaluation Report). New York: United Nations Children's Fund. 17 November 2016. pp. 8–9. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
  4. "UNICEF – Search Results". unicef.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
  5. "Skills & Competencies - CASEL". Archived from the original on 13 May 2011. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  7. "USA Funds Life Skills". Archived from the original on 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
  8. http://www.webmd.com/mental-health/tc/humor-therapy-topic-overview
  9. Dalkey, Norman; Helmer, Olaf (1963). "An Experimental Application of the Delphi Method to the use of experts". Management Science 9 (3): 458–467. doi:10.1287/mnsc.9.3.458. https://archive.org/details/sim_management-science_1963-04_9_3/page/458. 
  10. Bernice B. Brown (1968). "Delphi Process: A Methodology Used for the Elicitation of Opinions of Experts.": An earlier paper published by RAND (Document No: P-3925, 1968, 15 pages)
  11. Sackman, H. (1974), "Delphi Assessment: Expert Opinion, Forecasting and Group Process", R-1283-PR, April 1974. Brown, Thomas, "An Experiment in Probabilistic Forecasting", R-944-ARPA, 1972
  12. Harold A. Linstone, Murray Turoff (1975), The Delphi Method: Techniques and Applications, Reading, Mass.: Addison-Wesley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-04294-8
  13. "Puget Sound ESD – excellence & equity in education | Pre-K-12 Life Skills Curriculum Guide". psesd.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
  14. Improving Vocational and Life Skills of Ex-Child Labourers and at Risk Children Aged 15 to 17 Years பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம்

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கைத்_திறன்கள்&oldid=3893270" இலிருந்து மீள்விக்கப்பட்டது