குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை

ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை (United Nations Convention on the Rights of the Child, CRC, CROC, or UNCRC) என்பது குழுந்தைகளின் குடியியல், அரசியல், பெருளாதார, பண்பாட்டு உரிமைகளை விபரிக்கும் உடன்படிக்கை ஆகும். பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகளாகக் பொதுவாகக் கருதப்படுவர். இந்த உடன்படிக்கை 1990ம ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் ஜக்கிய அமெரிக்காவைத் தவிர்த்து கூடுதலான உறுப்புரிமை அரசுகள் ஒப்புதலளித்துள்ளன.