வஸ்தோக் 2
வஸ்தோக் 2 ஒரு சோவியத் விண்வெளித் திட்டம் ஆகும். இது, நீண்டநேர நிறையில்லா நிலையில் உடலில் ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிவதற்காக கெர்மன் டிட்டோவ் என்னும் விண்வெளிப்பயணியை ஒரு முழு நாள் புவியின் சுற்றுப்பாதையில் வைத்திருந்தது. யூரி ககாரினைப் போலன்றி, டிட்டோவ் சிறிது நேரம் விண்கலத்தைத் தனது கட்டுப்பாட்டில் இயக்கினார்.
வஸ்தோக் 2 | |
---|---|
திட்டச் சின்னம் | |
திட்ட விபரம் | |
திட்டப்பெயர்: | வஸ்தோக் 2 |
அழைப்புக்குறி: | Орёл (ஓர்யோல் - "கழுகு") |
பயணக்குழு அளவு: | 1 |
ஏவுதல்: | ஆகஸ்ட் 6, 1961 06:00 UTC ககாரினின் தொடக்கம் |
இறக்கம்: | ஆகஸ்ட் 7, 1961 07:18 UTC 51° N, 46° E, கிராஸ்னி குட்டுக்கு அண்மையில் |
கால அளவு: | 1d/01 :18
|
சுற்றுக்களின் எண்ணிக்கை: | 17.5 |
சேய்மைப்புள்ளி: | 221 கிமீ |
அண்மைப்புள்ளி: | 172 கிமீ |
காலம்: | 88.4 நிமிடங்கள் |
சுற்றுப்பாதை சாய்வு: | 64.8° |
திணிவு: | 4730 கிகி |
ஒரு விண்வெளி நோய், சூடாக்கி ஒன்று சரிவர இயங்காமல் வெப்பநிலை 6.1 °ச (43 °ப) வுக்கு இறங்கியமை, சேவைக்கலத்தில் இருந்து, மீள்கலம் உரிய முறையில் பிரிய முடியாதிருந்தமை போன்ற பிரச்சினகளின் மத்தியிலும், இத் திட்டம் பெருமளவு வெற்றியாகவே முடிந்தது. வஸ்ஹோத் திட்டம் உருவாக்கப்பட்டபோது மீள்கலம் அழிக்கப்பட்டது.
2008 ஆண்டு வரை, டிட்டோவோ மிகவும் குறைந்த வயதில் விண்வெளி சென்றவராக இருந்து வருகிறார். கலம் ஏவப்பட்டபோது இவருக்கு 26 வயதிலும் ஒரு மாதம் குறைவாகும்.