வா அருகில் வா

வா அருகில் வா (Vaa Arugil Vaa), 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திகில் தமிழ்த் திரைப்படம்.

வா அருகில் வா
இயக்கம்கலைவாணன் கண்ணதாசன்
தயாரிப்புஏ.மணவழகன்
கதைகலைவாணன் கண்ணதாசன்
இசைசாணக்யா
நடிப்புரம்யா கிருஷ்ணன்
ராஜா
வைஷ்ணவி
எஸ்.எஸ்.சந்திரன்
ஒளிப்பதிவுசுனில் கவியரசு
படத்தொகுப்புகே.ஆர்.ராமலிங்கம்
வெளியீடுஜனவரி 1, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

பேய்ப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நிறைய சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் தனது மகன் காதலித்த பெண்ணையே மணமுடித்து வைக்கிறார் பண்ணையார். அவரது மைத்துனனும், மனைவியும் அவரது பேராசைக்குத் தூபம் போடுபவர்கள். வீட்டுக்கு வந்த மருமகள் கருவுற்று வளைகாப்பு நடத்தும் நேரம், அந்த சொத்துக்கள் எல்லாம் கோர்ட்டில் அவள் அப்பாவின் பக்கம் தீர்ப்பாகவில்லை. அந்த அதிர்ச்சியில் அவளின் அப்பா மரணம் அடைகிறார். சொத்து இல்லாத மருமகளை ஒழித்துக்கட்ட திட்டம் போடும் பண்ணையார், அவரின் மனைவி மற்றும் மச்சான், அவளைக் கொலை செய்கின்றனர். அவளது நடத்தைக்கு களங்கம் கற்பித்து அவள் பண்ணையில் வேலை பார்ப்பவனோடு ஓடி விட்டாள் என்று நம்ப வைக்கின்றனர். அவர்களை நம்பி தன் மனைவியை வெறுக்கிறான். அவனுக்கு மறுமணம் முடித்து வைக்கின்றனர். முதல் மருமகளின் ஆவி அவள் எப்பொழுதும் வைத்திருக்கும் பொம்மையில் புகுந்து தன் மீது பொய்ப்பழி சுமத்தித் தன்னைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறது. தன் மேல் சந்தேகப்பட்ட கணவனையும் பழி வாங்க முயல்கையில் இரண்டாம் மனைவியின் தெய்வ சக்தியினால் அழிக்கப்பட்டு அன்னை பராசக்தியின் காலடியில் சேர்கிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_அருகில்_வா&oldid=3710302" இருந்து மீள்விக்கப்பட்டது