விகாசு தாக்கூர்
இந்தியப் பாரம் தூக்கும் வீரர்கள்
விகாசு தாக்கூர் (Vikas Thakur) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். 85 கிலோகிராம் மற்றும் 94 கி.கி பாரம் தூக்கும் எடைப் பிரிவுகளில் இவர் போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரம் இவருடைய சொந்த ஊராகும். 2014 ஆம் ஆண்டு இசுக்காட்லாந்து நாட்டில் கிளாசுகோவ் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 85 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார் [1].. 2018 ஆம் ஆண்டு குயின்சுலாந்து நாட்டின் கோல்டு கோசுட்டு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 94 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெண்கலப் பதக்கம் வென்றார் [2].
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 14 நவம்பர் 1993 பேட்னவுன், இந்தியா | |||||||||||||
வசிப்பிடம் | லூதியானா, பஞ்சாப், இந்தியா | |||||||||||||
உயரம் | 1.72 மீட்டர் | |||||||||||||
எடை | 84 கிலோகிராம் | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | பாரம் தூக்குதல் | |||||||||||||
நிகழ்வு(கள்) | 85 கி.கி | |||||||||||||
பயிற்றுவித்தது | பி.எசு. மெத்வான் | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
தேசிய இறுதி | 2013, 2014, 2015 , 2016 ஆண்டுகளில் இந்திய சாம்பியன் | |||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | அகன்ற பிடி 159கி.கி, குறுகிய பிடி 190 கி.கி | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Glasgow 2014 - Vikas Thakur Profile". results.glasgow2014.com. Archived from the original on 31 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vikas Thakur wins bronze in weightlifting at 2018 Commonwealth Games". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.