விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 27
- 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் (படம்) நகரை அமைத்தார்.
- 1930 – உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின்யின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அத்திலாந்திக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 – இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது.
- 1967 – ஆத்திரேலியாவில் நடந்த பொது வாக்கெடுப்பில் பழங்குடிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
- 1971 – கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.
அண்மைய நாட்கள்: மே 26 – மே 28 – மே 29