விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 11, 2015
கொன்றுண்ணிப் பறவைகள் என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் நகத்தால் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. படத்தில் கொன்றுண்ணிப் பறவைகளுள் ஒன்றான “சொட்டைக் கழுகு” ஒன்றைக் காணலாம். |