விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 9, 2011

அடன்சோனியா கிரான்டிடியரி

அடன்சோனியா கிரான்டிடியரி மடகாஸ்கரின் மிகவும் புகழ்பெற்ற ஆறு பாஓபாப்களுள் (பெருத்த அடிபாகம் கொண்ட மரங்கள்) ஒன்று. தீவாய்ப்புள்ள இவ்வினம் அடன்சோனியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இது மடகாஸ்கரின் அகணிய உயிரி ஆகும். இம்மரத்தின் பெயர் ஃப்ரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிரான்டிடியரின் (1836-1921) பெயரிலிருந்து வைக்கப்பட்டதாகும். இம்மரத்தின் முழுமையான தோற்றம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்