விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 8, 2010
சிட்னி துறைமுகப் பாலம் சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும், வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்துப் பாலமாக விளங்குகின்றது. 1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். |