விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 7, 2011

{{{texttitle}}}

புத்தகப்புழு 1850 இல் செருமனிய ஓவியரும் கவிஞருமான கார்ல் இசுப்பிட்சுவெக் என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம். இவ்வோவியம் நெப்போலியப் போர்களுக்கும், 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பாவின் உள்நோக்கிய, பழமைவாத மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதே நேரம், பரந்த உலகில் சுற்றிலும் நடப்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் கல்விமான் ஒருவரினூடாக அவ்வாறான மனப்போக்கைக் கேலியும் செய்கிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்