விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்ட் 26, 2012

{{{texttitle}}}

ஆவாரை அல்லது ஆவாரம்பூ ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரம். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடிகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

படம்: டி. சிறிநிவாசன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்