விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 10, 2011
இறம்புட்டான் சப்பின்டேசி குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பல்லாண்டுத் தாவரமாகும். தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டு மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இலங்கை முதலான நாடுகளில் பரந்து காணப்படுகிறது. இப்பழத்தில் பழுப்பு நிறம் கொண்ட கொழுப்பும் எண்ணெயும் நிறைந்த விதை இருக்கிறது. இது சமையலிலும் சோப்பு தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறம்புட்டானின் இலைகளும் தண்டுகளும் வேர்களும் மருத்துவத்திலும் சாயத் தொழிலும் பயன்படுத்தப்படுகின்றன. |