விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 13, 2013
பாரி பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலின் காரணமாக இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுகிறார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி இவ்வாரச் சிறப்புப் படமாக இடம்பெற்றுள்ளது. படம்: அருணன்கபிலன் |