விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 2, 2011
புலம்பல் என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். கிறித்தவர்கள் இந்நூலின் பகுதிகளைப் பெரிய வெள்ளிக்கிழமையில் இயேசுவின் துன்பங்களை நினைவுகூரும் வண்ணம் அறிக்கையிட்டு தியானிப்பது வழக்கம். கி.மு. 586 இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது. ஓவியத்தில் எருசலேமின் அழிவு குறித்துப் புலம்புகின்றார் எரேமியா இறைவாக்கினர். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: ஆம்ஸ்டர்டாம், ஒல்லாந்து. |