விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 26, 2014
கிளிமாஞ்சாரோ மலை தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்தது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு உகுரு என்று பெயர். படத்தில் மலையின் மேலிருந்து அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. |