விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 30, 2011
பீமன் சிலந்தி ஓர் அபூர்வ வகைச் சிலந்தி. நான்கு முதல் ஆறு அங்குலம் வரை நீளமும் இரண்டு அங்குல அகலமும் உள்ள இவற்றின் உடல் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகளும், புள்ளிகளும் நிறைந்து காணப்படும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். சில நாடுகளில் இந்த வலைகளை கொண்டு சிறிய மீன்களைப் பிடித்து வருகின்றனர். அடர்ந்த காடுகளில் மட்டுமே இவ்வகை சிலந்திகள் காணப்படும். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது. வனங்கள் செயற்கையாக அழிக்கப்படுவது, தீயில் எரிந்து நாசமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை சிலந்தி இனம் அழிந்து வருகிறது. |