விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 25, 2014
எறி கற்குழம்பு அல்லது லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது. படத்தில் அவாய் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வடிந்தோடும் லாவா காட்டப்பட்டுள்ளது. படம்: எம்பிஇசட்1 |