விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 25, 2010
கோவாலா (Koala) அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும். இது அவுஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்டஸ் இலைகளாகும். இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன. இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன. இப்படத்தில் காணப்படுவது சிட்னியில் உள்ள கோவாலா பூங்காவில் நித்திரை கொள்ளும் ஒரு கோவாலா. |