விலங்கு

மெய்க்கருவுயிரி உயிரினங்களின் பெரும் பிரிவாகும்
(மிருகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது பல உயிரணு உயிரி (Metazoa), என்பது இராச்சியத்தின் பெரும்பாலும் மெய்க்கருவுயிரி உயிரினங்களின் பெரும் பிரிவாகும். சில விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமானவை அனைத்து உயிரினங்களும் கரிமச் சேர்மங்களை உட்கொள்பவையாகவும், ஆக்சிசனை சுவாசிப்பவையாகவும், தன்னிச்சையாக நகரக்கூடியவையாகவும் (en:Motility), பாலினப்பெருக்கம் செய்பவையாகவும், முளைய விருத்தியின்போது வெற்றுக்கோள உயிரணுக்களான கருக்கோளத்திலிருந்து (en:Blastula) வளர்ச்சியடையும் உயிரினமாகவும் இருக்கின்றன.

விலங்கு
புதைப்படிவ காலம்:CryogenianPresent, 670–0Ma
உயிரியல் வகைப்பாடு e
திணை:
அனிமாலியா

தொகுதி

உலகில் சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான விலங்கு சிற்றினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பினும், கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிற்றினங்களே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1 மில்லியன் பூச்சியினங்களாகும். விலங்குகளின் நீளம் 8.5 மைக்ரோமீட்டர் (0.00033 அங்குலம்) முதல் 33.6 மீட்டர் (110 அடி) வரை வேறுபடுகிறது. இவ்வாறு வேறுபட்ட சிற்றினங்கள் தமக்கிடையிலும் சூழல்களுக்கிடையிலும் சிக்கலான தொடர்புகளைக் கொண்டுள்ளன. சிக்கலான உணவு வலை (en:Food web) அமைப்பையும் இவை கொண்டுள்ளன. அனிமாலியா என்ற இராச்சியம் மனிதர்களையும் உள்ளடக்கியது ஆயினும் பேச்சுவழக்குப் பயன்பாட்டில் விலங்கு என்ற சொல் பெரும்பாலும் மனிதரல்லாத விலங்குகளை மட்டுமே குறிக்கிறது.

பெரும்பாலான உயிருள்ள விலங்கினங்கள் இருபக்கச்சமச்சீர் உடலமைப்பைக் கொண்டன. இவற்றுள் உருளைப்புழுக்கள், கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகள் போன்ற முதுகெலும்பிலி தொகுதிகளை உள்ளடக்கிய புரோட்டோஸ்டோம்கள் காணப்படுகின்றன. இத்துடன் முதுகெலும்பிகளைக் கொண்ட முதுகுநாணிகள், மற்றும் முட்தோலிகள், ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய டியூட்டெரோஸ்டோம்களும் அடங்குகின்றன.

பிரீகாம்ப்ரியனின் எடியாக்கரன் உயிரியல் தரவுகளில் ஆரம்பகால விலங்குகள் பற்றிய தரவுகள் விளக்கப்பட்டுள்ளன. சுமார் 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கேம்ப்ரியன் வெடிப்பின் போது, பல நவீன விலங்குத் தொகுதிகள் தொல்லுயிர் எச்சங்களாகக் கிடைத்தபோது, கடல் உயிரினங்களாக தெளிவாக நிறுவப்பட்டன. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான 6,331 மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இவை 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பெயர் வரலாறு

தொகு

"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை அனிமலே என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும்.[3] உயிரியல் வரையறையானது அனிமாலியா இராச்சியத்தின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.[4] இது அனிமா என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக்[மேற்கோள் தேவை] குறிக்கிறது.[5][6][7][8] விலங்கு ராச்சியம் (Kingdom Animalia) என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதனையும் உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. "மெட்டாசூவா" என்ற சொல் பண்டைய கிரேக்க μετα (மெட்டா, "பின்னர்" என்று பொருள்படப் பயன்படுத்தப்பட்டது) மற்றும் ζῷᾰ (zōia, ζῷον zōion "விலங்கு" என்பதன் பன்மை) எனும் சொற்கலிலிருந்து உருவானது.[9][10]

பண்புகள்

தொகு

பிற உயிரினங்களிலிருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் பல உயிரணுக்களாலான மெய்க்கருவுயிரிகளாக இருக்கின்றன.[11] இப் பண்புகள் இவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஒரு உயிரணு கொண்ட உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. இவை தன்னூட்ட உயிரிகள் போல் தமக்கான உணவைத் தாமே தயார் செய்ய முடியாதவையாக[12] தமக்கான உணவுத் தேவைக்கு வேறு உயிரிகளில் தங்கியிருக்கும் சார்பூட்ட உயிரிகளாக இருக்கின்றன.[13] இந்தப் பண்பு தாவரங்கள் மற்றும் அல்காக்கள் போன்றவற்றிலிருந்து இவற்றைப் பிரித்தறிய உதவுகின்றன.[12][14] எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் தாமாக நகரும் தன்மை கொண்டனவாக உள்ளன[15] என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைய விருத்தியின்போது, முளையமானது ஒரு வெற்றுக்கோள வடிவில் விருத்தியடைய ஆரம்பிக்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும்.

உடலமைப்பு

தொகு

விலங்குகள் தனித்தனி இழையங்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகியவற்றில் மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலம் இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த சமிபாட்டுத் தொகுதியும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும்.[16] இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசூவான்கள் (பல உயிரணு உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் யூமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன.

இனப்பெருக்கமும், விருத்தியும்

தொகு
 
விலங்குகளில் முளையம் (1) பிளஸ்டியூலா எனப்படும் வெற்றுக்கோள வடிவ அமைப்பு (2).

ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பாலியல் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.[17] அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க உயிரணுக்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க ஒடுக்கற்பிரிவு எனப்படும் கலப்பிரிவு நடக்கிறது. அதன்மூலம் உருவாகும் ஒருமடிய நிலையிலுள்ள இவ்விரு பாலணுக்களும் ஒன்றிணைந்து கருவணுக்களை உருவாக்கி, அவை புதிய தனியன்களாய் வளர்ச்சியுறுகின்றன.

கலவியற்ற இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. கன்னிப்பிறப்பு மூலம் இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பெற்றோரின் மரபணுப் படியெடுப்புப் போன்று இருக்கும். அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (en:fragmentation) முறை, அல்லது அரும்புதல் (en:Budding) முறை மூலமாகவும் இது நடைபெறுகின்றது. [18][19]

ஒரு கருமுட்டையானது கருக்கோளம் (en:Blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளம் தோன்றுகிறது. இது மறு ஒழுங்கமைவுககும், உயிரணு வேற்றுமைப்பாட்டுக்கும்யும் உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோளங்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறு ஒழுங்கமைவுக்குள் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட உயிரணுக் கூட்டம் ஒரே மாதிரியான வேற்றுமைப்பாட்டுக்கு உட்படும்போது இழையமாக விருத்தி அடையும். பின்னர் வெவ்வேறு இழையங்கள் கூட்டாக இணைந்து ஒரு தொழிலைச் செய்யும் உறுப்பாக விருத்தியடையும்.

உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம்

தொகு

விலங்குகள தமது உணவுத்தேவையை அல்லது சக்திக்கான ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தைப் பொறுத்து சில சூழலியல் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. ஊனுண்ணிகள், தாவர உண்ணிகள், அனைத்துண்ணிகள், கழிவுகள், குப்பைகள் போன்ற அழிவுக்குள்ளாகும் பதார்த்தங்களிலிருந்து தமது உணவைப் பெறும் சார்பூட்ட உயிரிகளான கழிவுண்ணிகள் (en:Ditritivore)[20], ஒட்டுண்ணி வாழ்வு வாழும் ஒட்டுண்ணிகள் ஆகியன இவற்றுள் அடங்கும்.[21] விலங்குகளிக்கிடையிலான உணவுண்ணும் முறையை அடிப்படையாகக் கொண்ட தொடர்பானது சிக்கலான உணவு வலையை உருவாக்கும். அநேகமாக அனைத்து பல்கல இரைகெளவிகளும் விலங்குகளே.[22] 

ஊனுண்ணிகள் அல்லது அனைத்துண்ணிகளில் இரைகௌவல் என்பது ஒரு நுகர்வோர் வளத் தொடர்பாடல் ஆகும்.[23] இதில் வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு), ஒரு இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்கின்றது. ஊனுண்ணிகள் அல்லது அனைத்துண்ணிகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் இரைகௌவல் எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு கழிவுண்ணி அல்லது பிணந்திண்ணி (detritivory) வகை ஆகும். அதாவது இறந்த இரையை உண்பது அல்லது நுகர்வது. இன்னொரு பிரிவு ஒட்டுண்ணிகள் ஆகும். சில சமயங்களில் உண்ணும் நடத்தைகளுக்கு இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக வேட்டையாடும் விலங்குகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த இரையின் உடலைத் தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. அப்போது அந்த வழித்தோன்றல்கள் ஒட்டுண்ணிகளாகத் தமது உணவைப் பெற்றுக் கொள்கின்றன.

சில விலங்குகள் வேறுபட்ட உணவு முறைகளைச் சேர்த்துப் பயன்படுத்தும். எடுத்துக் காட்டாக, சில பூச்சியினங்களில் முதிர்ந்த விலங்கானது பூவிலிருக்கும் தேனைத் தமது உணவாகக் கொள்ளும். ஆனால், அவை தாவரத்தின் இலைகளில் இடும் முட்டைகளிலிருந்து உருவாகும் குடம்பிகள் தாவரத்தை உண்பதன் மூலம் தாவரத்தையே அழித்துவிடும்.[24][25]

ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு (en:Anti-predator adaptation) வழிவகுத்துள்ளது.[26][27]

அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் சக்தியை, எளிய சர்க்கரைகளாக மாற்றுகின்றன. கரியமில வாயு (CO2) மற்றும் நீர் (H2O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C6H12O6) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றிப் பிராண வாயுவை (O2) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம்.

மூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு

தொகு

விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்டுகள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (flagellates). செல்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன.

விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் (paleontologists) மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.[28][29][30]

பல்லுயிர்தன்மை

தொகு

அளவு

தொகு

விலங்குகளில் நீலத் திமிங்கிலம் (Balaenoptera musculus) இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரிய விலங்கு ஆகும். இதன் எடை 190 டன்கள் வரையும் நீளம் 33.6 மீட்டர் (110 அடி) வரையும் உள்ளது.[31][32][33] நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு ஆப்பிரிக்க யானை (Loxodonta africana). இதன் எடை 12.25 டன்னும்[31] நீளம் 10.67 மீட்டரும் (35.0 அடி) ஆகும். சுமார் 73 டன் எடையுள்ள சௌரோபாட், அர்ஜென்டினோசொரசு போன்ற டைனோசர்களும் வாழ்ந்துள்ளன. 39 மீட்டர் நீளமுடைய பெரும் சொரசு இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரிய நிலவாழ் விலங்காகும்.[34][35] பெரிய விலங்குகளைப் போல பல விலங்குகள் நுண்ணியவை. இவற்றை நுண்ணோக்கி கொண்டே காண இயலும். இவற்றில் சில: மிக்சோசூவா (புழையுடலிகளில் காணப்படும் ஒட்டுண்ணிகள்). இவை 20 மைக்ரோமீட்டருக்கு மேல் வளராது.[36] மேலும் சிறிய விலங்குகளில் ஒன்று மிக்சோபோலசு சீகல். இது முழுமையாக வளரும் போது 8.5 மைக்ரோமீட்டருக்கு மேல் வளராது.[37]

எண்ணிக்கையும் வாழிடமும்

தொகு

பின்வரும் அட்டவணையில், விலங்கு குழுக்களின் முக்கிய வாழ்விடங்கள் (நிலப்பரப்பு, நன்னீர்[38] மற்றும் கடல்[39]) மற்றும் வாழ்க்கை முறை (சுதந்திரமான வாழ்க்கை அல்லது ஒட்டுண்ணி வாழ்க்கை[40]) குறித்து விவரங்கள் தரப்பட்டுள்ளன.[41] விவரிக்கப்பட்டுள்ள சிற்றினங்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை இந்த அட்டவணைப் பட்டியலிடுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிற்றினங்களின் மதிப்பீடுகள் அறிவியல் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளன. பல்வேறு கணிப்பு முறைகளின் அடிப்படையில் இவை மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை பெருமளவில் மாறுபடும். உதாரணமாக, சுமார் 25,000–27,000 வகையான நூற்புழுக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூற்புழு சிற்றினங்களின் மொத்த எண்ணிக்கையின் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளில் 10,000–20,000 அடங்கும்.[42] வகைபிரித்தல் படிநிலையில் உள்ள வடிவங்களைப் பயன்படுத்தி, விலங்கு இனங்களின் மொத்த எண்ணிக்கை-இதுவரை விவரிக்கப்படாதவை உட்பட-2011 இல் சுமார் 7.77 மில்லியனாக கணக்கிடப்பட்டது.[43][44][a]

தொகுதி உதாரணம் விவரிக்கப்பட்டுள்ள சிற்றினங்கள் நிலம் கடல் நன்னீர் தன்னிச்சையாக வாழ்வன ஒட்டுண்ணி வாழ்க்கை
கணுக்காலி   1,257,000[41] 1,000,000
(பூச்சிகள்)[46]
>40,000
(மலக்கோஇசுடுருக்கா)[47]
94,000[38] ஆம்[39] >45,000[b][40]
மெல்லுடலி   85,000[41]
107,000[48]
35,000[48] 60,000[48] 5,000[38]
12,000[48]
ஆம்[39] >5,600[40]
முதுகுநாணி   >70,000[41][49] 23,000[50] 13,000[50] 18,000[38]
9,000[50]
ஆம் 40
(பூனைமீன்)[40][51]
தட்டைப் புழுக்கள்   29,500[41] ஆம்[52] ஆம்[39] 1,300[38] ஆம்[39]

3,000–6,500[53]

>40,000[40]

4,000–25,000[53]

நூற்புழுக்கள்   25,000[41] ஆம் (மணல்)[39] 4,000[42] 2,000[38] 11,000[42] 14,000[42]
வளைதழைப்புழுக்கள்   17,000[41] ஆம் (மணல்)[39] ஆம்[39] 1,750[38] ஆம் 400[40]
கடற்காஞ்சொறி   16,000[41] ஆம்[39] ஆம் (சில)[39] ஆம்[39] >1,350
(மிக்சோசூவா)[40]
பஞ்சுயிரி   10,800[41] ஆம்[39] 200–300[38] ஆம் ஆம்[54]
முட்தோலிகள்   7,500[41] 7,500[41] ஆம்[39]
பிரையோசூவா   6,000[41] ஆம்[39] 60–80[38] ஆம்
ரோட்டிபெரா   2,000[41] >400[55] 2,000[38] ஆம்
தார்டிகிரேடா   1,335[41] ஆம்[56]
(ஈரமான தாவரங்கள்)
ஆம் ஆம் ஆம்
கேசுடுரோடிரிச்சா   794[41] ஆம்[56] ஆம் ஆம்
சீனோசீலோமார்பா   430[41] ஆம்[56] ஆம்
நிமடோமார்பா   354[41] ஆம்
(ஈரப்பதமான இடங்கள்)[56]
ஆம்
(ஒரு பேரினம், நெக்டானா)[57]
ஆம் ஆம்
(முதிருயிரிகள்)[56]
ஆம்
(இளம் உயிரி நிலையில்)[56]
பிராங்கியோபோடா   396[41]
(30,000 அழிந்துவிட்டன)[56]
ஆம்[56] ஆம்
கின்னோரைங்சா   196[41] ஆம் (களிமண்)[56] ஆம்
டீனோபோரா   187[41] ஆம்[56] ஆம்
ஒனிகோபோரா   187[41] ஆம்[56] ஆம்
கீரோநாத்தா   186[41] ஆம்[56] ஆம்
எண்டோபுரோக்டா   172[41] ஆம்[56] ஆம் ஆம்
அரைநாணிகள்   126[41] ஆம்[56] ஆம்
இராம்போசூவா   107[41] ஆம்
நாத்தோசுடோமுலிடா   97[41] ஆம் (மணல்)[56] ஆம்
லோரிசிபெரா   30[41] ஆம்(மணல்)[56] ஆம்
ஆர்த்தோனெக்டிடா   29[41] ஆம்
பிரியாபுலிடா   20[41] ஆம்[56] ஆம்
பொரோனிடா   16[41] ஆம்[56] ஆம்
மைக்ரோநாத்தோசூவா   1[56] ஆம் (மணல்)[56] ஆம்
பிளக்கோசூவா   1[41] ஆம்[56] ஆம்
2013ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி விவரிக்கப்பட்ட சிற்றினங்கள்: 1,525,728

விலங்குத் தொகுதிகள்

தொகு

துளையுடலிகள் (Porifera)

தொகு
 
ஆரஞ்சு யானைக் காது கடற்பாசி. முன்புலத்தில். இரண்டு பவளப்பூச்சிகள். பின்புலத்தில்: ஒரு கடல் விசிறி மற்றும் ஒரு கடல் கம்பி.

கடற்பாசிகள் (துளையுடலிகள்) ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் ஒட்டிவாழ்பவை. பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. ஆயினும் 2008 ஆம் ஆண்டில் 21 இனங்களில்[58] 150 மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது.

இரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை உறுப்புகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. புற அடுக்கு (ectoderm) மற்றும் அகஅடுக்கு (endoderm) ஆகிய இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு. அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் ஈரடுக்கு (diploblastic) விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு பிளாகோசோவான்கள் ஒத்தவையாக இருக்கும். ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது.

எஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன. அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன. உடம்பு மூவடுக்கு கொண்டதாக இருக்கிறது. அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன. திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன. செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் (coelom) அல்லது சூடோகொயலம் (pseudocoelom) என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது. ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு – உதாரணமாக முதிர்ந்த முட்தோலிகள் (echinoderm) ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும். சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

பைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை டியூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள் என்னும் இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன.

டியூடெரோஸ்டோம்கள்

தொகு

டியூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. டியூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. டியூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன.

இவையெல்லாம் டியூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன. டியூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள் (Echinodermata) மற்றும் முதுகெலும்புள்ளவை (Chordate)ஆகியவை. முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்றும் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை. பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான வெர்டிப்ரேட்டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும். இவற்றில் மீன், நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், மற்றும் பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்.

சடோநாதா அல்லது அம்பு புழுக்களும் டியூடெரோஸ்டோம்களாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன.

எக்டிசாசோவா

தொகு
 
மஞ்சள்-சிறகு தட்டாம்பூச்சி

எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் (Arthropoda) இதற்கு சொந்தமானதே. இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் (Arthropoda) நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன.

புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன.

பிளாட்டிசோவா

தொகு
 
பெட்ஃபோர்டின் தட்டைப்புழு

பிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம் (Platyhelminthes), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன. ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போது கருதப்படுகிறது.[59]

ஒட்டுயிர் தட்டைப் புழுக்கள் (flukes) மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை.[60]

பிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக உடற்குழி உள்ளவை (pseudocoelomate)களாக இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரதானமானவை ரோடிஃபெரா உயிரினங்கள் ஆகும். இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடங்கும்.[61] இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொள்கின்றன. இதிலிருந்து இவை நாதிஃபெரா (Gnathifera) என்று அழைக்கப்படுகின்றன.

லோபோட்ரோசாசோவா

தொகு
 
ரோமன் நத்தை, ஹெலிக்ஸ் போமாசியா

லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள் (Annelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.[62][63] விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (Annelida) கணுக்காலிகளுக்கு (Arthropoda) நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன.[64] ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.[65]

லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது.[66] அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.[67] ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும்,[68] சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு (Annelida) நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது.[69][70] புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.[71]

மாதிரி உயிரினங்கள்

தொகு

விலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, பல்வேறு விஞ்ஞானிகளது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான ட்ராசோபிலா மெலனோகாஸ்டர் மற்றும் நெமடோடெ கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ் ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு (metazoan) மாதிரி உயிரினங்களாக இருக்கின்றன. இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் நிலை இதற்கு வசதி செய்தது. ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல மரபணுக்கள், இன்ட்ரான்கள் மற்றும் மரபணு இணைப்புகள் காணாதிருக்கும். இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் மரபணுத் திட்டங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட மரபணுக்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.[72]

ஓஸ்கரெல்லா கார்மெலா கடற்பாசி மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, கடற்பாசிகள் மற்றும் இமெடாசோவா விலங்குகளின் பொதுவான மூதாதையரின் மரபணு அமைப்பு முன்னர் அனுமானித்திருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.[73]

விலங்குகள் ராச்சியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி (Mus musculus) மற்றும் வரிக்குதிரைமீன் (Danio rerio) ஆகியவை அடக்கம்.

 
நவீன பாகுபாட்டியலின் தந்தை என அறியப்படும் கரோலஸ் லினீயஸ்

வகைப்பாட்டு வரலாறு

தொகு

முன்சகாப்தத்தில், அரிஸ்டாட்டில் தனது சொந்த அவதானிப்புகளின் அடிப்படையில் விலங்குகளை [இ] இரத்தம் உள்ளவை (தோராயமாக, முதுகெலும்புகள்) மற்றும் இல்லாதவை என்று பிரித்தார். பின்னர் விலங்குகளை மனிதனிடமிருந்து (இரத்தம், 2 கால்கள், பகுத்தறிவு ஆன்மாவுடன்) உயிருள்ள நான்கு கால்கள் (இரத்தம், 4 கால்கள், உணர்திறன் உள்ள ஆன்மாவுடன்) மற்றும் ஓட்டுமீன்கள் (இரத்தம் இல்லை, பல கால்கள், உணர்திறன் ஆன்மா) கடற்பாசிகள் (இரத்தம் இல்லை, கால்கள் இல்லை, காய்கறி ஆன்மா) போன்ற தன்னிச்சையாக உருவாக்கும் உயிரினங்கள் என வகைப்படுத்தினார். அரிஸ்டாட்டில் கடற்பாசிகள் விலங்குகளா என்பது குறித்து நிச்சயமற்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இவை அமைப்பில் உணர்வு, பசி மற்றும் இயக்கம் காரணமாக விலங்குகளாகவோ அல்லது கடற்பாசிகள் தொடுவதை உணர முடியும் என்பதால் தாவரங்களாக இருக்கலாம என்று கருதினார். மேலும் இவை பாறைகளிலிருந்து இழுக்கப்படும்போது சுருங்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இவை தாவரங்களைப் போல வேரூன்றி, நகராமல் இருந்தன.[74]

1758-ல், கார்ல் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரேயில் முதல் படிநிலை வகைப்பாட்டை உருவாக்கினார்.[75] இவரது அசல் திட்டத்தில், விலங்குகள் மூன்று ராஜ்யங்களில் ஒன்றாகும். இவை புழுக்கள், பூச்சிகள், மீன்கள், நீர்நில வாழ்வன, பறவைகள் மற்றும் பாலூட்டி என பல வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டன. வாழும் உலகத்தை அரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லின்னேயஸ் வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். இதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள் (protozoa), இவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன.

லினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), இன்செக்டா (Insecta), மீன்கள் (Pisces), நீர் நில வாழுயிர் (Amphibia), பறவையினம் (Aves), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் கார்டேடா (Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது.

கூடுதல் பார்வைக்கு

தொகு
 • விலங்கு நடத்தை
 • மிருக உரிமைகள்
 • விலங்குகளின் பெயர்களின் பட்டியல்
 • நியூரான்கள் எண்ணிக்கையின் படி விலங்குகளின் பட்டியல்
 • தாவரம்

குறிப்புகள்

தொகு
 1. The application of DNA barcoding to taxonomy further complicates this; a 2016 barcoding analysis estimated a total count of nearly 100,000 insect species for Canada alone, and extrapolated that the global insect fauna must be in excess of 10 million species, of which nearly 2 million are in a single fly family known as gall midges (Cecidomyiidae).[45]
 2. Not including parasitoids.[40]

மேற்கோள்கள்

தொகு
 1. Harzsch, S.; Müller, C. H. (18 May 2007). "A new look at the ventral nerve centre of Sagitta: implications for the phylogenetic position of Chaetognatha (arrow worms) and the evolution of the bilaterian nervous system". Frontiers in Zoology 4: 14. doi:10.1186/1742-9994-4-14. பப்மெட்:17511857. 
 2. Annelid phylogeny and status of Sipuncula and Echiura
 3. Cresswell, Julia (2010). The Oxford Dictionary of Word Origins (2nd ed.). New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-954793-7. 'having the breath of life', from anima 'air, breath, life'.
 4. "Animal". The American Heritage Dictionary (4th). (2006). Houghton Mifflin. 
 5. "animal". English Oxford Living Dictionaries. Archived from the original on 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 26 July 2018.
 6. Boly, Melanie; Seth, Anil K.; Wilke, Melanie; Ingmundson, Paul; Baars, Bernard; Laureys, Steven; Edelman, David; Tsuchiya, Naotsugu (2013). "Consciousness in humans and non-human animals: recent advances and future directions". Frontiers in Psychology 4: 625. doi:10.3389/fpsyg.2013.00625. பப்மெட்:24198791. 
 7. "The use of non-human animals in research". Royal Society. Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
 8. "Nonhuman definition and meaning". Collins English Dictionary. Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
 9. "Metazoan".. 
 10. "Metazoa"..  and further meta- (sense 1) பரணிடப்பட்டது 30 சூலை 2022 at the வந்தவழி இயந்திரம் and -zoa பரணிடப்பட்டது 30 சூலை 2022 at the வந்தவழி இயந்திரம்.
 11. National Zoo. "Panda Classroom" (in English). 
 12. 12.0 12.1 Davidson, Michael W. "Animal CellStructure". Archived from the original on 20 September 2007. பார்க்கப்பட்ட நாள் 20 September 2007.
 13. Jennifer Bergman. "Heterotrophs" (in English). 
 14. Douglas AE, Raven JA (January 2003). "Genomes at the interface between bacteria and organelles". Philosophical transactions of the Royal Society of London. Series B, Biological sciences 358 (1429): 5–17; discussion 517–8. doi:10.1098/rstb.2002.1188. பப்மெட்:12594915. 
 15. Saupe, S.G. "Concepts of Biology" (in English). 
 16. Hillmer, Gero; Lehmann, Ulrich (1983). Fossil Invertebrates. Translated by J. Lettau. CUP Archive. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-27028-1. Archived from the original on 7 May 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
 17. Knobil, Ernst (1998). Encyclopedia of reproduction, Volume 1. Academic Press. p. 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-227020-8. {{cite book}}: no-break space character in |page= at position 68 (help)
 18. Adiyodi, K.G.; Hughes, Roger N.; Adiyodi, Rita G. (July 2002). Reproductive Biology of Invertebrates, Volume 11, Progress in Asexual Reproduction. Wiley. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-48968-9.
 19. Schatz, Phil. "Concepts of Biology | How Animals Reproduce". OpenStax College. Archived from the original on 6 March 2018. பார்க்கப்பட்ட நாள் 5 March 2018. {{cite web}}: no-break space character in |title= at position 20 (help)
 20. Marchetti, Mauro; Rivas, Victoria (2001). Geomorphology and environmental impact assessment. Taylor & Francis. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5809-344-8.
 21. Levy, Charles K. (1973). Elements of Biology. Appleton-Century-Crofts. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-390-55627-1.
 22. Simpson, Alastair G.B; Roger, Andrew J. (2004). "The real 'kingdoms' of eukaryotes". Current Biology 14 (17): R693–696. doi:10.1016/j.cub.2004.08.038. பப்மெட்:15341755. 
 23. Begon, M.; Townsend, C.; Harper, J. (1996). Ecology: Individuals, populations and communities (Third ed.). Blackwell Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86542-845-4.
 24. Stevens, Alison N. P. (2010). "Predation, Herbivory, and Parasitism". Nature Education Knowledge 3 (10): 36 இம் மூலத்தில் இருந்து 30 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170930230324/http://www.nature.com/scitable/knowledge/library/predation-herbivory-and-parasitism-13261134. பார்த்த நாள்: 12 February 2018. 
 25. Jervis, M. A.; Kidd, N. A. C. (November 1986). "Host-Feeding Strategies in Hymenopteran Parasitoids". Biological Reviews 61 (4): 395–434. doi:10.1111/j.1469-185x.1986.tb00660.x. https://archive.org/details/sim_biological-reviews_1986-11_61_4/page/395. 
 26. Allen, Larry Glen; Pondella, Daniel J.; Horn, Michael H. (2006). Ecology of marine fishes: California and adjacent waters. University of California Press. p. 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24653-9.
 27. Caro, Tim (2005). Antipredator Defenses in Birds and Mammals. University of Chicago Press. pp. 1–6 and passim.
 28. Seilacher, A., Bose, P.K. and Pflüger, F. (1998). "Animals More Than 1 Billion Years Ago: Trace Fossil Evidence from India". Science 282 (5386): 80–83. doi:10.1126/science.282.5386.80. பப்மெட்:9756480. http://www.sciencemag.org/cgi/content/abstract/282/5386/80. பார்த்த நாள்: 2007-08-20. 
 29. Matz, Mikhail V.; Tamara M. Frank, N. Justin Marshall, Edith A. Widder and Sonke Johnsen (2008-12-09). "Giant Deep-Sea Protist Produces Bilaterian-like Traces". Current Biology (Elsevier Ltd) 18 (18): 1–6. doi:10.1016/j.cub.2008.10.028. http://www.biology.duke.edu/johnsenlab/pdfs/pubs/sea%20grapes%202008.pdf. பார்த்த நாள்: 2008-12-05. 
 30. Reilly, Michael (2008-11-20). "Single-celled giant upends early evolution". MSNBC இம் மூலத்தில் இருந்து 2009-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090218155637/http://www.msnbc.msn.com/id/27827279/. பார்த்த நாள்: 2008-12-05. 
 31. 31.0 31.1 Wood, Gerald (1983). The Guinness Book of Animal Facts and Feats. Enfield, Middlesex : Guinness Superlatives. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85112-235-9.
 32. Davies, Ella (20 April 2016). "The longest animal alive may be one you never thought of". BBC Earth. Archived from the original on 19 March 2018. பார்க்கப்பட்ட நாள் 1 March 2018.
 33. "Largest mammal". Guinness World Records. Archived from the original on 31 January 2018. பார்க்கப்பட்ட நாள் 1 March 2018.
 34. Mazzetta, Gerardo V.; Christiansen, Per; Fariña, Richard A. (2004). "Giants and Bizarres: Body Size of Some Southern South American Cretaceous Dinosaurs". Historical Biology 16 (2–4): 71–83. doi:10.1080/08912960410001715132. 
 35. Curtice, Brian (2020). "Society of Vertebrate Paleontology" (PDF). Vertpaleo.org.
 36. Fiala, Ivan (10 July 2008). "Myxozoa". Tree of Life Web Project. Archived from the original on 1 March 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
 37. Kaur, H.; Singh, R. (2011). "Two new species of Myxobolus (Myxozoa: Myxosporea: Bivalvulida) infecting an Indian major carp and a cat fish in wetlands of Punjab, India". Journal of Parasitic Diseases 35 (2): 169–176. doi:10.1007/s12639-011-0061-4. பப்மெட்:23024499. 
 38. 38.00 38.01 38.02 38.03 38.04 38.05 38.06 38.07 38.08 38.09 Balian, E. V.; Lévêque, C.; Segers, H.; Martens, K. (2008). Freshwater Animal Diversity Assessment. Springer. p. 628. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-8259-7.
 39. 39.00 39.01 39.02 39.03 39.04 39.05 39.06 39.07 39.08 39.09 39.10 39.11 39.12 39.13 Hogenboom, Melissa. "There are only 35 kinds of animal and most are really weird". BBC Earth. Archived from the original on 10 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
 40. 40.0 40.1 40.2 40.3 40.4 40.5 40.6 40.7 Poulin, Robert (2007). Evolutionary Ecology of Parasites. Princeton University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-12085-0.
 41. 41.00 41.01 41.02 41.03 41.04 41.05 41.06 41.07 41.08 41.09 41.10 41.11 41.12 41.13 41.14 41.15 41.16 41.17 41.18 41.19 41.20 41.21 41.22 41.23 41.24 41.25 41.26 41.27 41.28 41.29 41.30 Zhang, Zhi-Qiang (2013-08-30). "Animal biodiversity: An update of classification and diversity in 2013. In: Zhang, Z.-Q. (Ed.) Animal Biodiversity: An Outline of Higher-level Classification and Survey of Taxonomic Richness (Addenda 2013)". Zootaxa 3703 (1): 5. doi:10.11646/zootaxa.3703.1.3 இம் மூலத்தில் இருந்து 24 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190424154926/https://biotaxa.org/Zootaxa/article/download/zootaxa.3703.1.3/4273. பார்த்த நாள்: 2 March 2018. 
 42. 42.0 42.1 42.2 42.3 Felder, Darryl L.; Camp, David K. (2009). Gulf of Mexico Origin, Waters, and Biota: Biodiversity. Texas A&M University Press. p. 1111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60344-269-5.
 43. "How many species on Earth? About 8.7 million, new estimate says". 24 August 2011. Archived from the original on 1 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
 44. Mora, Camilo; Tittensor, Derek P.; Adl, Sina; Simpson, Alastair G.B.; Worm, Boris (2011-08-23). Mace, Georgina M.. ed. "How Many Species Are There on Earth and in the Ocean?". PLOS Biology 9 (8): e1001127. doi:10.1371/journal.pbio.1001127. பப்மெட்:21886479. 
 45. Hebert, Paul D.N.; Ratnasingham, Sujeevan; Zakharov, Evgeny V.; Telfer, Angela C.; Levesque-Beaudin, Valerie; Milton, Megan A.; Pedersen, Stephanie; Jannetta, Paul et al. (1 August 2016). "Counting animal species with DNA barcodes: Canadian insects". Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences 371 (1702): 20150333. doi:10.1098/rstb.2015.0333. பப்மெட்:27481785. 
 46. Stork, Nigel E. (January 2018). "How Many Species of Insects and Other Terrestrial Arthropods Are There on Earth?". Annual Review of Entomology 63 (1): 31–45. doi:10.1146/annurev-ento-020117-043348. பப்மெட்:28938083.  Stork notes that 1m insects have been named, making much larger predicted estimates.
 47. Poore, Hugh F. (2002). "Introduction". Crustacea: Malacostraca. Zoological catalogue of Australia. Vol. 19.2A. CSIRO Publishing. pp. 1–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-643-06901-5.
 48. 48.0 48.1 48.2 48.3 Nicol, David (June 1969). "The Number of Living Species of Molluscs". Systematic Zoology 18 (2): 251–254. doi:10.2307/2412618. 
 49. Uetz, P.. "A Quarter Century of Reptile and Amphibian Databases". Herpetological Review 52: 246–255 இம் மூலத்தில் இருந்து 21 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220221154655/https://www.researchgate.net/publication/352462027_A_Quarter_Century_of_Reptile_and_Amphibian_Databases. பார்த்த நாள்: 2 October 2021. 
 50. 50.0 50.1 50.2 Reaka-Kudla, Marjorie L.; Wilson, Don E.; Wilson, Edward O. (1996). Biodiversity II: Understanding and Protecting Our Biological Resources. Joseph Henry Press. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-309-52075-1.
 51. Burton, Derek; Burton, Margaret (2017). Essential Fish Biology: Diversity, Structure and Function. Oxford University Press. pp. 281–282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-878555-2. Trichomycteridae ... includes obligate parasitic fish. Thus 17 genera from 2 subfamilies, Vandelliinae; 4 genera, 9spp. and Stegophilinae; 13 genera, 31 spp. are parasites on gills (Vandelliinae) or skin (stegophilines) of fish.
 52. Sluys, R. (1999). "Global diversity of land planarians (Platyhelminthes, Tricladida, Terricola): a new indicator-taxon in biodiversity and conservation studies". Biodiversity and Conservation 8 (12): 1663–1681. doi:10.1023/A:1008994925673. 
 53. 53.0 53.1 Pandian, T. J. (2020). Reproduction and Development in Platyhelminthes. CRC Press. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-05490-3. Archived from the original on 26 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.
 54. Morand, Serge; Krasnov, Boris R.; Littlewood, D. Timothy J. (2015). Parasite Diversity and Diversification. Cambridge University Press. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-03765-6. Archived from the original on 12 December 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
 55. Fontaneto, Diego. "Marine Rotifers | An Unexplored World of Richness" (PDF). JMBA Global Marine Environment. pp. 4–5. Archived (PDF) from the original on 2 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
 56. 56.00 56.01 56.02 56.03 56.04 56.05 56.06 56.07 56.08 56.09 56.10 56.11 56.12 56.13 56.14 56.15 56.16 56.17 56.18 56.19 56.20 Hickman, Cleveland P.; Keen, Susan L.; Larson, Allan; Eisenhour, David J. (2018). Animal Diversity (8th ed.). McGraw-Hill Education, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-260-08427-6.
 57. "First report of marine horsehair worms (Nematomorpha: Nectonema) parasitic in isopod crustaceans". Parasitol Res 120 (7): 2357–2362. 2021. doi:10.1007/s00436-021-07213-9. 
 58. Dunn et al. 2008)."Broad phylogenomic sampling improves resolution of the animal tree of life". Nature 06614.
 59. Ruiz-Trillo, I.; Ruiz-Trillo, Iñaki; Riutort, Marta; Littlewood, D. Timothy J.; Herniou, Elisabeth A.; Baguñà, Jaume (March 1999). "Acoel Flatworms: Earliest Extant Bilaterian Metazoans, Not Members of Platyhelminthes". Science 283 (5409): 1919–1923. doi:10.1126/science.283.5409.1919. பப்மெட்:10082465. 
 60. Todaro, Antonio. "Gastrotricha: Overview". Gastrotricha: World Portal. University of Modena & Reggio Emilia. பார்க்கப்பட்ட நாள் 2008-01-26.
 61. Kristensen, Reinhardt Møbjerg (July 2002). "An Introduction to Loricifera, Cycliophora, and Micrognathozoa". Integrative and Comparative Biology (Oxford Journals) 42 (3): 641–651. doi:10.1093/icb/42.3.641. http://icb.oxfordjournals.org/cgi/content/full/42/3/641. பார்த்த நாள்: 2008-01-26. 
 62. "Biodiversity: Mollusca". The Scottish Association for Marine Science. Archived from the original on 2006-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
 63. Russell, Bruce J. (Writer), Denning, David (Writer).(2000).Branches on the Tree of Life: Annelids[VHS].BioMEDIA ASSOCIATES.
 64. Eernisse, Douglas J.; Eernisse, Douglas J.; Albert, James S.; Anderson , Frank E. (1992). "Annelida and Arthropoda are not sister taxa: A phylogenetic analysis of spiralean metazoan morphology". Systematic Biology 41 (3): 305–330. doi:10.2307/2992569. https://archive.org/details/sim_systematic-biology_1992-09_41_3/page/305. பார்த்த நாள்: 2007-11-19. 
 65. Eernisse, Douglas J.; Kim, Chang Bae; Moon, Seung Yeo; Gelder, Stuart R.; Kim, Won (September 1996). "Phylogenetic Relationships of Annelids, Molluscs, and Arthropods Evidenced from Molecules and Morphology" ([தொடர்பிழந்த இணைப்பு]Scholar search). Journal of Molecular Evolution (New York: Springer) 43 (3): 207–215. doi:10.1007/PL00006079. http://www.springerlink.com/content/xptr6ga3ettxnmb9/. பார்த்த நாள்: 2007-11-19. [தொடர்பிழந்த இணைப்பு]
 66. Collins, Allen G. (1995), The Lophophore, University of California Museum of Paleontology {{citation}}: Check |author-link= value (help); External link in |author-link= (help)
 67. Adoutte, A.; Adoutte, André; Balavoine, Guillaume; Lartillot, Nicolas; Lespinet, Olivier; Prud'homme, Benjamin; de Rosa, Renaud (25 April 2000). "The new animal phylogeny: Reliability and implications". Proceedings of the National Academy of Sciences 97 (9): 4453–4456. doi:10.1073/pnas.97.9.4453. பப்மெட்:10781043. http://www.pnas.org/cgi/content/full/97/9/4453. பார்த்த நாள்: 2007-11-19. 
 68. Passamaneck, Yale J. (2003), "Woods Hole Oceanographic Institution", Molecular Phylogenetics of the Metazoan Clade Lophotrochozoa (PDF), p. 124[தொடர்பிழந்த இணைப்பு]
 69. Adoutte, A.; Sundberg, Per; Turbevilleb, J. M.; Lindha, Susanne (September 2001). "Phylogenetic relationships among higher nemertean (Nemertea) taxa inferred from 18S rDNA sequences". Molecular Phylogenetics and Evolution 20 (3): 327–334. doi:10.1006/mpev.2001.0982. 
 70. "The mitochondrial genome of the Sipunculid Phascolopsis gouldii supports its association with Annelida rather than Mollusca" (PDF). Molecular Biology and Evolution 19 (2): 127–137. February 2002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2844. பப்மெட்:11801741. http://mbe.oxfordjournals.org/cgi/reprint/19/2/127.pdf. பார்த்த நாள்: 2007-11-19. 
 71. Nielsen, Claus (April 2001). "Bryozoa (Ectoprocta: ‘Moss’ Animals)". Encyclopedia of Life Sciences (John Wiley & Sons, Ltd). doi:10.1038/npg.els.0001613. http://mrw.interscience.wiley.com/emrw/9780470015902/els/article/a0001613/current/abstract. பார்த்த நாள்: 2008-01-19. 
 72. N.H. Putnam, et al. (July 2007). "Sea anemone genome reveals ancestral eumetazoan gene repertoire and genomic organization". Science 317 (5834): 86–94. doi:10.1126/science.1139158. பப்மெட்:17615350. 
 73. Wang, X.; Wang, Xiujuan; Lavrov Dennis V. (2006-10-27). "Mitochondrial Genome of the Homoscleromorph Oscarella carmela (Porifera, Demospongiae) Reveals Unexpected Complexity in the Common Ancestor of Sponges and Other Animals". Molecular Biology and Evolution (Oxford Journals) 24 (2): 363–373. doi:10.1093/molbev/msl167. பப்மெட்:17090697. http://mbe.oxfordjournals.org/cgi/content/abstract/24/2/363. பார்த்த நாள்: 2008-01-19. 
 74. Leroi, Armand Marie (2014). The Lagoon: How Aristotle Invented Science. Bloomsbury. pp. 111–119, 270–271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4088-3622-4.
 75. Linnaeus, Carl (1758). Systema naturae per regna tria naturae :secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in லத்தின்) (10th ed.). Holmiae (Laurentii Salvii). Archived from the original on 10 October 2008. பார்க்கப்பட்ட நாள் 22 September 2008.

நூற்பட்டி

தொகு
 • கிளாஸ் நீல்சன். Animal Evolution: Interrelationships of the Living Phyla (இரண்டாம் பதிப்பு). ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரஸ், 2001.
 • நட் ஸ்கிமிட்-நீல்சன். Animal Physiology: Adaptation and Environment . (5th edition). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ், 1997.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு&oldid=4048357" இலிருந்து மீள்விக்கப்பட்டது