விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 5, 2009
இலங்கையின் மலை நாட்டின் அம்பேவளையிலிருந்து தென்மேற்குத் திசையாக தோன்றும் காட்சி. நிலநடுக் கோட்டுக்கு அமையாக அமைந்திருந்தாலும் கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளபடியால் இங்கே ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகின்றது. இலங்கையில் பால் பண்ணைகள் அதிகளவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். கடந்த காலத்தில் இதை அண்மித்த பகுதிகளில் உருளைக் கிழங்குப் பண்ணைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன எனினும் சூழலுக்கு ஏற்பட்ட தீங்கு காரணமாக பின்னர் இவை அகற்றப்பட்டன. தொலைவில் தெரியும் முகடு இலங்கையின் முக்கிய வணக்கத்தலங்களுள் ஒன்றான சிவனொளிபாத மலையாகும். |