விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 13, 2015
ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி திட்டம் எம் ஐ டி மீடியா லேப் என்னும் அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் குழுவால் நிக்கொலசு நெக்ரொபாண்டே என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்டது. குறைந்த விலையில் (நூறு அமெரிக்க டாலர்) குழந்தைகள் பலரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு மடிக்கணினியை உருவாக்குவதாகும். எக்ஸ்-ஓ (XO) என்னும் லினக்சு இயங்குதளத்துடன் கூடிய ஒரு மடிக்கணினி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அக்கணினியின் பீட்டா வெளியீட்டு மாதிரியைக் காணலாம். படம்:மைக் மெக்கிரகர் |