விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 2, 2018
வானவில் கிளி ஆஸ்திரலேசியாவில் காணப்படும் ஒரு வகைக் கிளியினம் ஆகும். 25 முதல் 30 செமீ நீள நடுத்தர அளவுப் பறவை. இவை பொழில், கடற்கரையோரப் புதர், மரக்காடு ஆகிய பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டுள்ளன. வடக்கு குயின்சுலாந்து முதல் தெற்கு ஆத்திரேலியா, தாசுமேனியா ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. பழங்கள், மகரந்தம், மலர்த்தேன் போன்றவையே இவற்றின் முக்கிய உணவாகும். இதன் துணையினம் மொலுக்கானுசு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படம்: Fir0002 |