விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 5, 2011
சைவர்களின் முதன்மைக் கடவுளாகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம். நடராசர் ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலை, படத்தில் காணப்படுகிறது. இத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை படைத்தலையும், அடைக்கலம் தரும் கை காத்தலையும், தீச்சுவாலை அழித்தலையும், தூக்கிய கால் அருளல் ஆகிய முத்தி நிலையையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. |