விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 20, 2011
சனி சூரியக் குடும்பத்தில் ஆறாவதாக அமைந்துள்ள கோள். இது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரியது. அடர்வு குறைவான கோள்களுள் ஒன்று. இதற்கு 61 துணைக்கோள்கள் உள்ளன. இக்கோள் அதன் வளையங்களுக்காகவே சிறப்பாக அறியப்படும். இவ்வளையங்களை கலீலியோ கலிலி கண்டுபிடித்தார். புற ஊதாக் கதிர் மூலம் எடுக்கபட்ட படம் காட்டப்பட்டுள்ளது. |