விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 25, 2007
ராஜபுதன ஓவியப் பாணி என்பது, இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஓர் ஓவியப் பாணியாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. |