விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 29, 2013
அல்லாஹு அக்பர் என்பது இறைவனே மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் அரபுத் தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தொடர் முஸ்லிம்களால் பல்வேறு வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஐந்து முறை நடைபெறும் தொழுகை அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. திருக்குர்ஆனில் இத்தொடர் மூன்று இடங்களில் வருகிறது. படத்தில் இசுலாமியர் ஒருவர் தக்பிருக்கு முன்னதாகத் தன் கைகளை உயர்த்துவது காட்டப்பட்டுள்ளது. |