விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 13, 2011
செவ்வந்திக்கல் நகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குவார்ட்சு ஆகும். இது பிப்ரவரி மாதத்திற்குரிய பிறப்புக்கல். மேலும் இது செவ்வூதா நிறத்திலும் குவார்ட்சின் அளவே கடினத்தன்மையும் கொண்டதால் இதன் பெரும்பயன்பாடு நகைகளிலேயே உள்ளது. எக்ஸ் கதிர், காமா கதிர் முதலியவற்றைக் கொண்டு செயற்கைச் செவ்வந்திக்கற்கள் செய்யப்படுகின்றன. இவையும் இயற்கையான கற்களில் உள்ள அனைத்து இயற்பியல் வேதியியற்பண்புகளையும் பெற்றுள்ளன. பிரேசில், உருகுவே ஆகிய நாடுகள் செவ்வந்திக்கல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. |