விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 20, 2013
அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ அவருக்குத் தரப்படவேண்டும்" என்ற காரணம்பற்றி ஆண்டுதோறும் ஓஸ்லோவில் நார்வே நாடாளுமன்றத்தினால் வழங்கப்படுகிறது. படத்தில் 1994 ஆண்டிற்கான பரிசினைப் பெற்ற யாசிர் அராஃபத், சிமோன் பெரெஸ், யிட்சாக் ராபின் (முறையே இடமிருந்து வலமாக) ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். பதிவேற்றம்: மாத்தன்யா; மூலம்: அரசு பத்திரிக்கை அலுவலகம் |