விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 23, 2011
நீல அச்சுப்படி என்பது, தொழில்நுட்ப வரைபடங்களைப் படியெடுக்கும் ஒரு குறிப்பிட்ட முறை மூலம் பெறப்படும் அச்சுப்படிகளைக் குறிக்கும். அண்மைக்காலத்தில் பெரிய அளவு தாள்களில் ஒளிப்படப்படிகள் எடுப்பதற்கான பொறிகள் பயன்பாட்டுக்கு வரும்வரை கட்டடக்கலை, பல்வேறு பொறியியல் துறைகள் போன்றவை சார்ந்த வடிவமைப்பு வரைபடங்களைப் படியெடுப்பதற்கு நீல அச்சுப்படி முறையே பயன்பாட்டில் இருந்து வந்தது. தொடக்க காலத்தில் இத்தகைய அச்சுப்படிகள் அடர்நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறக் கோடுகளையும் எழுத்துக்களையும் கொண்டதாக இருந்தன. இதனாலேயே இவற்றை நீல அச்சுப்படிகள் என அழைத்தனர். |