விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 17, 2016
புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும் சூரியனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்து பின்னர் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவை சூலை 14, 2015 அன்று நாசாவின் நியூ ஒரைசான்ஸ் விண்கலம் எடுத்த முதல் உயர்-நுணுக்கப் (HD) படம் காட்டப்பட்டுள்ளது. இது இரால்ஃப்/பன்னிறமாலை புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்ட நீல, சிவப்பு, அகச்சிவப்பு படங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் பல நில அமைப்புகள் வெளிர் நீலம், மஞ்சள், ஆரஞ்சு, அடர் சிவப்பு போன்ற குறைவான அளவு பல நிறங்களில் காட்டப்பட்டுள்ளன. படம்: நாசா |