விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 8, 2012
ஆர்க்டிக் ஓநாய் பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவை துருவ ஓநாய்கள் என்றும் வெள்ளை ஓநாய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. -112oC வரை கடுங்குளிரைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்த இவை ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்து இருளில் வாழும். சராசரியாக 11 ஆண்டுகள் உயிர்வாழும் இவை பரவலாக கனடா, அலாஸ்கா, கிரீன்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. |