விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 12, 2007
மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா என்பது ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. |