விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 14, 2012
மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களிலும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. இம்மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது. மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாக பெரிதும் பயிலப்படுகிறது. இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். படத்தில் மற்போரில் ஈடுபடும் இரு இந்திய இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர். |