விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 7, 2012
அலன் தோட்டம் என்பது டொரன்டோவிலுள்ள பூங்காவுடன் இணைந்த உள்ளகத் தாவரவியல் தோட்டம் ஆகும். 1879இல் கட்டப்பட்ட இது கண்ணாடி மாளிகையினுள் அமைந்த ஒரு தோட்டமாகவும் பொது நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் இருந்து வந்தது. 1902ஆம் ஆண்டு இது தீப்பிடித்து அழிந்து, அதன்பின்னர் 1910ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட கட்டடமே தற்போது உள்ளது. படத்தில் தோட்டத்திலுள்ள கண்ணாடி மாளிகை காட்டப்பட்டுள்ளது. |