விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 17, 2015
பாம்பாட்டிகள் என்போர் பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவர் ஆவர். இவர்கள் பொதுவாக மகுடி ஊதி பாம்பினை ஆடச்செய்வர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட படமான இதில் மொரோக்கோ நாட்டின் பாம்பாட்டிகள் உள்ளனர். இக்கலையானது இந்தியாவில் தோன்றி தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியது. பண்டையத்தமிழர் பாம்பாட்டுதலை கூத்தின் ஒருவகையாகப் பகுத்தனர். படம்: தூமாஸ்; சீரமைப்பு: லிசெ பிரோஎர் |