விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 30, 2012
உலகளாவிய அளவிலே தலைசிறந்த ஓவியச்சிறப்பு கொண்டதாகக் கருதத்தக்க சமணர் குகை ஓவியம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் என்னும் மலைக்குன்றுப் பகுதியில் உள்ளது. மிகவும் அழியும் தறுவாயில் இருக்கும் பேரழகான ஓவியம் மகாராட்டிராவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அசந்தா குகை ஓவியங்களுக்கு ஈடாகக் கருதப்படுகின்றன. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை. |