விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2020
- மே 2, 2020 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|300px|]] |
சிட்டுக்குருவி என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ. ஆகவும் எடை 24-39.5 கிராமாகவும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். படம்: Sonya7iv |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சூன் 7, 2020 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது. படம்: Serouj Ourishian |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு