விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/சந்திப்பு-08062017
எமது முதல் தொடக்க உரையாடல்கள் ஊடாக நாம் பல கலைகளைப் பற்றி தகவல்களை தொகுக்கக் கூடியதாக அமைந்தது. வரும் சந்திப்பு மலையகத்தில் outreach, பயிற்சிகள் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பாக விரிவாக உரையாடவுள்ளோம். தமிழினி மலையக outreach தொடர்பாக செயற்பட்டு வருகிறார். மேலும், லுணுகலை சிறீ மற்றும் நித்தியானந்தனை இந்தச் சந்திப்புக்கு அழைத்துள்ளேன். அதை இங்கு பார்க்கலாம்: விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/கலைகள். ஆர்வம் உள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
திகதி/நேரம்/இடம்
தொகு- யூலை 8, 2017
- இலங்கை/இந்திய நேரம்: பிப: 5:30 - 7:00
- ஸ்கைப்: https://join.skype.com/BxrWCOHgEheZ
நிகழ்ச்சி நிரல்
தொகு- விக்கியூடக நல்கை paper work தொடர்பான இற்றை - 5 நிமிடம்
- அறிக்கையிடல் தேவைகளை விளங்கிக் கொள்ளல் - 10 நிமிடங்கள்
- வரைகலைப் போட்டி - 15 நிமிடங்கள்
- மலையகத்தில் தொழிற்கலைகள், ஆவணப்படுத்தல், பயிற்சிகள் - 30 நிமிடங்கள்
- தொழிற்கலைகளை அடையாளம் காணல் - 30 நிமிடங்கள்
பங்கேற்பாளர்கள்
தொகு- நுணுகலை சிறீ
- தமிழினி
- பாலா
- மயூரநாதன்
- பேரா. பாலசுதரம்
- கோபி
- பிரசாத்
- நற்கீரன்
- சிவகுமார்
சந்திப்பின் ஒலிக் கோப்பு
தொகுசந்திப்புக் குறிப்புகள்
தொகு- பலர் - மலையக நாட்டுப்புறக் கலைகள், கலைப் பாராமபரியம் (எ.கா கும்மு, கோலாட்டம், தீபந்து விளையாட்டு, சிலம்பாட்டம், கத்தி சுத்தல்), விழாக்கள், மலையக ஊர்கள், மலையக சமய மரபுகள் போன்றவற்றை இந்தச் செயற்திட்டம் ஊடாக ஆவணப்படுத்த வேண்டும்.
- நுணுகலை சிறீ/தமிழினி: ரோதமுனி, கலாத்தமுனி, மட்டத்து சாமி, அங்கை அம்மன் போன்ற சிறு தெய்வ வழிபாடு மலையகத்தில் பரவலாக உள்ளது.
- சிவகுமார் - ஆகம சாராத கோயில்களுக்கு வாய்மொழிப் பதிவுகள் உண்டு. அவற்றை பத்ததி என்பார்கள்.
- பொன். பாலா - மலையகச் சூழல் சார்பான விடயங்களை (எ.கா மண் பாதுகாப்பு முறைகள், மலையடி வேளாண்மை) நாம் ஆவணப்படுத்த முடியும்.
- தமிழினி - மலையகத்தில் கணினி வசதி குறைவு. இது பயிற்சிகள், பட்டறைகள் முன்னெடுகக் தடையாக உள்ளது. அங்குள்ள செயற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியும்.
- நுணுகலை சிறீ - முத்துக்குமார் அவர்கள் CWC/NAW இன் பிரஜாசக்தி அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். அவர்கள் கணினி வசதிகளைக் கொண்ட நடுவங்களைக் ஒவ்வொரு பகுதியிலும் வைத்து இருக்கிறார்கள். இலவசமாக இந்தச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. முத்துக்குமார் அவர்களை இணைத்துக் கொண்டால் அவர் உதவக்கூடும்.
- நற்கீரன் - Contacts List நாம் கூகிள் ஆவணம் ஒன்றில் பகிர்வோம். Resource Centers ஐ நாம் திரட்டி பகிர்ந்தால் எமக்கும் ஒரு வளமாக இருக்கும். ஒரு நல்ல வளமாகவும் அமையும். பரந்து பட்டவர்களை engage செய்வற்கான வழிமுறைகளை நாம் பரிசீலிக்க வேண்டும். அறிமுக நிகழ்வு/பட்டறை ஒன்றை ஒருங்கிணைப்பது பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம்.
- தமிழினி - இலங்கை சுவடிகள் திணைக்களத்தில் நாம் தகவல் திரட்ட முடியும். பக்கங்களை படி எடுக்க முடியும்.
- மயூரநாதன் - முருக குனரட்ணம் அவர்களின் Preliminarily Sources of Sri Lankan Tamil History என்ற நூலில் சில விபரங்களை நாம் பெறக் கூடியதாக இருக்கும்.